பட்டியல் பழங்குடியினர் மற்றும் பராம்பர்ய வனவாழ் மக்கள் (வன உரிமைகள் அங்கீகரிக்கும்) சட்டம் 2006 -ன் படி 2005க்கு முன் வரை காட்டில காலங்காலமாக வாழும் மக்களுக்கு பட்டா மாநில அரசுகள் வழங்கவேண்டும். பட்டா கிடைத்த பழங்குடியினர் மட்டும் அங்கு வாழவும், காடு சார்ந்த வாழ்க்கையை வாழவும் அனுமதிக்கப்படுவார்கள்.
நாடு முழுவதும் 16 மாநிலங்களில் 11,72,931 பட்டா மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் ஜூலை 27 வரை மாநிலங்களுக்கு பட்டா நிராகரிக்கப்பட்ட காட்டின் பாதுகாவலர்களான பழங்குடியின மக்களை வெளியேற்ற நேரம் தந்துள்ளனர். தமிழ்நாட்டில் 9029 பழங்குடியினர் அவர்கள் வாழிவிடத்திலிருந்து விரட்டப்பட உள்ளனர்
Wildlife first என்ற அமைப்பு பழங்குடியின மக்களை வெளியேற்ற வழக்கு தொடுத்திருந்தது.
மகாராஷ்ரா சுடாப்பி காட்டில் 250 ஹக்டேர் நிலம் பதாஞ்சலி பாபாராம்தேவுக்கு food park அமைக்க,
164 ஹக்டேர் நிலம் அதானிக்காக நாட்டின் 3ஆம் பெரிய மின்சாரம் தயாரிக்கும் ஆலைக்கு( Adani Power Maharashtra Limited),
467.5 ஹக்டேர் நிலம் அம்பானிக்கு சிமென்ட் ஆலை அமைக்க என 2015 முதல் 2018 வரை 20,314.12 ஹக்டெர் வன நிலம் கார்ப்பரெட்டுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமில் பதாஞ்சலி நிறுனம் 1000கோடி மதிப்பில் 150ஏக்கர் வனஅழிப்பு நடத்தி கட்ட தோண்டிய குழியில் விழுந்து 1 பெண் யானை இறந்து, அதன் குட்டி காயமுற்றது. ஜக்கியின் வன ஆக்ரமிப்பிப்பாலும் யானைகள் பாதிப்புக்குள்ளாகிறது.
2017ல் மட்டும் 91,798 ஹெக்டெர் வனநிலம் பல்வேறு திட்டங்களுக்காக வழங்க Forest Advisory Committee (FAC) அவசரமவசரமாக முடிவெடுத்தது.
மத்திய அரசின் வழக்கறிஞர் விசாரணையின்போது ஆஜராகாமல் காடுகளை மட்டுமல்லாமல் காட்டு விலங்குகளையும் அழிக்கும்
யானைகளின் வழித்தடங்களை ஆக்ரமித்த ஜக்கியை, அதானி போன்ற சாமியார்களையும் கார்ப்பரெட்டுகளையும் அனுமதித்து பூர்வகுடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறது அரசு.
கீழ்மட்ட அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டவையே அனைத்து மனுக்களும். மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.