நிச்சயம் இந்த மாரடைப்பு, புற்றுநோய், கிட்னி பிரச்சினை இன்னபிற நோய்கள் வர இறைச்சி வகைகள் கூட காரணமல்ல பாதுகாப்பாற்ற எண்ணெய் வகைகளே காரணம் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டு இப்பொழுதெல்லாம் மக்கள் செக்கில் ஆட்டபட்ட எண்ணெய்களை வாங்க ஆரம்பித்தாயிற்று.
சிலரோ கவனமாக மூலபொருளை கொடுத்து எண்ணெய் வாங்கி செல்லும் அளவு விழிப்புடன் இருக்கின்றனர், அப்படியே நலமுடனும் இருக்கின்றனர்.
இதனால் என்னாயிற்று என்றால் இந்த ரீபைன்ட் ஆயில், மினரல் ஆயில், கலப்படம் மிகுந்த சன்பிளவர் ஆயில் எல்லாம் விற்பனை ஆகவில்லை.
கூட்டி கழித்துபார்த்தால் இந்த செக் எண்ணெய்க்கு உணவு பாதுகாப்பு துறை ஏன் குதித்தோடி வந்திருக்கின்றது என்பது புரியும்.
அப்படி மக்கள் நலனில் அபார அக்கறை உள்ள துறை என்றால் இந்த ரீபைன்ட் ஆயில் கம்பெனிகள், எடிபிள் ஆயில் என ஏதோ ஒன்றை சூரியகாந்தி எண்ணையில் கலக்கும் கம்பெனிகள் எல்லாம் விசாரித்தார்களா?
பாமாயில் முதல் எத்தனையோ விஷயங்கள் இறக்குமதி செய்யபடுகின்றன, அதனை கவனித்தார்களா? சோதித்து உறுதிபடுத்தினார்களா ?
இல்லை, ஏனென்றால் அவை எல்லாம் பரகாசுர கம்பெனிகள் யாரும் கை வைக்க முடியாது, அதனால் அவை தரமற்ற எண்ணெயினை கவர்ச்சி பாக்கெட்களில் விற்கலாம்.
வல்லவன் விற்றதே எண்ணெய்.
அந்த சூரியகாந்தி எண்ணெய் முதல் பல எண்ணெய்களில் கழிவு கச்சா எண்ணெய் கலக்கபடுவதாக பகிரங்க புகார் வருகின்றது, மிக மிக ஆபத்தான விஷயம் அது. அதனை இத்துறை சோதித்ததா?
ஆக அந்த மாபெரும் அரக்கர்களை விட்டுவிட்டு மாட்டு செக்கில் பிழிபவர்களிடம் அதுவும் மூலபொருளை மக்களிடமே வாங்கி பிழிபவர்களிடம் சென்று தங்கள் கடமையினை உணவு பாதுகாப்புதுறை நிறைவேற்றுமாம்.
இதெல்லாம் சிறுதொழிலை நசுக்கும் விஷயம் மட்டுமல்ல மக்களை பணக்கார் கம்பெனிகளின் மோசமான எண்ணெயினை வாங்கி உண்டு நாசமாய் சாவுங்கள் என சொல்வதும் ஆகும்.
இம்மாதிரி விஷயங்களில் மக்கள் எச்சரிக்கையாயிருந்து, இதனை எல்லாம் கடந்து செக்லில் ஆட்டபடும் இயற்கை எண்ணையினை வாங்கி ஆரோக்கியத்தை காப்பதே நல்லது.
இன்றைய நோய்களுக்கு மூல காரணம் எண்ணெய், சீனி, வண்ணம் சேர்க்க பயன்படும் ரசாயாணம், காபி, கலப்பட டீ தூள் என சில விஷயங்கள்.
இதெல்லாம் தவிர்த்து நம்மால் நலமாக வாழமுடியுமா என்றால் நிச்சயம் முடியும், அக்காலத்தில் இவை இன்றிதான் மிக்க நலமாக வாழ்ந்தார்கள்.
இதில் மிக விழிப்பாய் இருக்க வேண்டிய விஷயம் எண்ணெய், தமிழகம் அதில் விழிக்க ஆரம்பிக்க பராகசுர கம்பெனிகள் கண்களை உருட்டுகின்றன.
உன்னை அழிக்கத் தான் அரசே தவிர.. உன்னை காக்க அல்ல...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.