அம்பேத்கரின் உச்சகட்ட கோபம்...
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மனுநீதியை தீயிட்டு கொளுத்திய அம்பேத்கர்.
அதே மாநாட்டில் சில விஷயங்களை பேசினார் அவைகள் எல்லாம் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கட்டளையிட்டார்.
அதன் விபரம் வருமாறு...
இனி நேரடி அம்பேத்கர் வார்த்தைகள்.
மனுஸ்மிருதியிலும் இவைப்போன்ற இதர நூல்களிலும் கூறப்பட்டுள்ள விஷயங்கள் நய நாகரிகமற்றவையாகவும் மிகவும் இழிவினும் இழிவானவையாக உள்ளது,
இதையடுத்து இவைகளை என் தலைமையிலான இந்த மாநாடு கடுமையாக இவைகளை கண்டிக்கிறது.
இந்த கண்டனத்திற்கு அறிகுறியாக அவற்றை தீயிட்டு கொளுத்த தீர்மானிக்கிறது.
இனி சில உரிமைப் பிரகடனத்தை நான் வெளியிடுகிறேன்..
1 ,அனைத்து இந்துக்களும் ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
2 இதற்கு சட்டம் இயற்றப்பட
வேண்டும்.
3 பிராமணன் சூத்திரண் போன்ற வார்தைகளை உபயோகிப்பதை தடைச்செய்ய வேண்டும்.
4, இந்து சமய குருக்களை தேர்ந்தெடுக்க பரீட்சை நடத்தபட வேண்டும்.
இதில் மக்களில் யார் தேர்ச்சி பெறுகிறாரோ அவரையே கோவில் குருக்களாக நியமனம் செய்ய வேண்டும்.
இப்படியாக இருந்தது.
வேதத்தை கொளுத்திய செய்தி புற்றீசல் போல பரவியது.
செய்வதறியாது திகைத்து நின்ற உயர்சாதி மக்கள், இப்போது ஏதும் செய்ய முடியாதவர்களாக ஆனார்கள்.
இதையெல்லாம் சரியாக கணித்த அம்பேத்கர், கூறுகிறார்.
குளமும் தண்ணீரும் பொது யாரும் யாருக்கும் அதிகாரம் செய்யமுடியாது என்று கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கினார்.
இதோடு முடியவில்லை அம்பேத்கருக்கு எதிராக செய்தியை திரித்து வெளியிட்டது அன்றைய நாளிதழ்கள் கூட்டம் ஆங்காங்கே அம்பேத்கருக்கு எதிராக கிளம்பியது.
இதையறிந்த அம்பேத்கர்
இந்தியன் நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கையில் விளக்கம் கொடுக்கிறார்.
அடங்கியப்பாடு இல்லை .
எப்படி இந்த ஆளு இப்படி செய்வாரு என தூண்டிவிட்ப்பட்ட இளைஞர் படை கலவரத்தை தூண்ட நினைத்தது.
அதே சூட்டோடு சூடாக அம்பேத்கர் திடீர் உத்தரவு பிறப்பித்தார்..
இதுநாள்வரை அரசுக்கு எதிராக ஏதும் செய்யாமல் குந்தகம் விளைவிக்காமல் இருக்கிறேன்.
இருப்பினும் அரசு இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.
ஆகவே இந்த முறை நான் சில ஆயிரம் மக்களை திரட்டி சத்தியாகிரகம் செய்வது உறுதி என்று அறிவிப்பு வெளியானது.
வெளியான முதல் அரசு அலுவலக அதிகாரிகள் உட்பட அனைவரும் பரபரப்பானார்கள்.
காரணம் சத்தியாகிரகம் செய்துவிட்டால் அதிலுள்ள மக்கள் அனைவரும் அம்பேத்கர் உத்தரவுக்கு கட்டுபட்டவராக இருப்பார்கள்.
இது ஒரு மிகப்பெரிய இயக்கமாக மாறிவிட்டால் அவ்வளவுதான் இந்தியாவை ஒட்டுமொத்தமாக தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்து விடுவார் அம்பேத்கர்.
(அதுவும் ஒடுக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று எல்லாம் ஒன்று கூடிவிட்டாள் என்ன ஆவது)
என்ற இரகசிய அறிக்கைதான் காரணம்.
அம்பேத்கரை வந்து சந்திப்பதும் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு வருவதும் போவதுமாய் இருந்தனர்.
ஆனால் அம்பேத்கர் இதை விடுவதாக இல்லை.
பம்பாய் கிரானிக்கள் செய்தித்தாளில் தலைப்புச் செய்தியாக இதான் வந்தது.
கடும் கோபமுற்ற அம்பேத்கர் பிப்ரவரி 26 தேதி ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கர் சில இரகசிய கூட்டத்தை கூட்டினார்.
மஹத் குளம் சம்பந்தமாகவும் சத்தியாகிரகம் சம்பந்தமாகவும் அதில் விவாதிக்கப்பட்டது.
இதில் கிட்டத்தட்ட 2000 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் என்று
பிரசுரித்தது. .
இப்படிபரபரப்பாக இருந்த நேரத்தில் தான் காந்தி அவர்களுக்கு விஷயம் தெரியப்படுத்தப்படுகிறது.
மஹாத்மா காந்தி அவர்கள் இந்த பிரச்சினையில் களத்தில் இறங்குகிறார்.
முதல் கட்டமாக அம்பேத்கரை அழைத்துப்பேசுகிறார்.
ஆனாலும் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் வருகிறது.
அம்பேத்கர் கடும் கோபம் கொள்கிறார்.
அப்படியென்றால் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன ?
பேசுவோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.