03/08/2018

குலதெய்வ வழிபாடு - மிக முக்கிய பதிவு...


பெரும்பாலான தமிழ்மக்களின் குலதெய்வக் கோவில்கள் என்பவை  போரில் வீரமரணம் அடைந்த மாவீரர்களின் நடுகல் வழிபாட்டின் நீட்சியே.

மாவீர்கள் இறந்த இடத்துக்கு ஆண்டுக்கு ஓருமுறை சென்று படையல் வைத்து வழிபட்டு வந்தனர். மாவீர்கள் வீரமரணம் அடைந்த இடம் அடையாளம் தெரியாமல் போய்விடும் என்பதால் அங்கே நினைவுக்காக நடுகல்லையும் (Tombstone ), அக்கல்லில் அவ்வீரனின் புடைப்புச் சிற்பத்தையும் உருவாக்கினர்.

எழுதப்படிக்கத் தெரிந்த சிலர் அவ்வீரனின் செயலை நடுகல்லில் கல்வெட்டாகவும் செதுக்கி  வைத்தனர்.

படையல் வைப்பதற்கு சிலமணி நேரங்கள்  முன்னதாகவே சென்று  அடர்த்தியான புதர்களை  வெட்டியெறிந்து நடுகல்லைச் சுற்றியுள்ள இடத்தை சுத்தம் செய்வர். இதனை ஒரு தமிழ்ப்படத்தில் நடிகர் விவேக் கிண்டல் செய்வது போல ஒரு காட்சிவரும்.

நடுகல்லின் அருகே சூலமும் வேலும் நடப்பட்டிருக்கும். சேவலை வேலில் குத்தி பலியிடுவது இன்றும் பல ஊர்களில் நடைமுறையில் உள்ளது.

வீரமரணம் அடைந்தவர்கள் கருப்பசாமிகளாக நம்மை காவல் காப்பார்கள் என்பது நம் முன்னோர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். அக்கருப்புக்கு வேண்டிய சேவல்/கிடாயின்  குருதியைக் கொடுத்து வழிபடுவதை காலம் காலமாக கிராமிய மக்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

கருப்பசாமி வழிபாட்டை சரிவரப் புரிந்து கொள்ளமுடியாத ஆங்கிலேயர்கள் கிராமிய மக்களின் வழிபாடுகளை பேய் வழிபாடு  (Devil shrine)  என்று கொச்சைப்படுத்தினர்.

காவல் கருப்புகள் கொடுத்த வாக்குக்குக் கட்டுப்படும்.

நம் இனத்தின் எதிரிகளான பிராமணர்கள் அஞ்சுவது இந்தக் காவல் கருப்புகளுக்கு மட்டும் தான். எண்ணிகையில் சிறுபான்மையினரான பிராமணர்கள் படையெடுத்து வந்து தமிழர்களை வீழ்த்தியிருக்கவே முடியாது என்பது என் கருத்து.

காலப்போக்கில் இந்தக் கருப்புகளைக் கட்டும் வித்தையை அவர்கள் கற்றுக்கொண்டனர் ( அதர்வன வேதமாக இருக்கலாம் ). அதில் முன்னோடிகளாக இருந்தவர்கள் நம்பூதிரிகள் ஆவர்.

தொடக்கத்தில  தங்கள் நன்மைக்காக கெட்ட ஆன்மாக்களை மட்டும் அண்டவிடாமல் தடுக்கக் கண்டு பிடிக்கப்பட்ட வித்தையை நம் காவல் கருப்புகளின் மேல் சோதனை செய்து பார்த்து, அவற்றைக் கட்டுவதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

சிதிலம் அடைந்த குலதெய்வக் கோவில்களை புனரமைக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் பிராமணர்களை வைத்து கும்பாபிசேகம் செய்து நமக்கு நாமே மிகப் பெரிய ஆப்பாக சொருகிக் கொண்டோம்.

அவன் எவ்வாறு காவல் கருப்புகளைக் கட்டுகிறான்?

உலோகத் தகடு மற்றும் கலசத்தைப் பயன் படுத்தித்தான் அவன் நம் காவல் கருப்புகளைக் கட்டுகிறான். சிலை பிரதிச்டை என்ற பெயரில் சிலையின் அடியில் ஒரு உலோகத் தகடை மறைத்துவைத்து விடுவான். கருவறையின் மேல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் கலசங்களை வைத்துக் கட்டுவான்.

கோவில் கும்பாபிசேகத்தின் பொழுது நீங்கள் இரண்டு விசயங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

ஒன்று: கும்பாபிசேகம் எப்போதும் காலை 8-10 மணிக்குள் மட்டும் தான் செய்வார்கள்.

இரண்டு: கும்பத்தின் மீது ஒரு கழுகு பறந்து சென்றால் மட்டுமே கும்பாபிசேகம் நிறைவு பெற்றது ( கருப்பைக் கட்டியாச்சு ) என்று அறிவிப்பார்கள். ஒரு வேளை கழுகு வரவில்லை என்றால் அடுத்த நாள் மீண்டும் முயற்சி செய்வார்கள்.

ஏன் 8-10 மணி ?

ஒரு சூரிய நாளும் சூரிய ஆண்டும் ஒன்றோடு ஒன்று போருந்திக்கொள்பவை. ஒரு சூரிய நாளின் 8-10 மணி என்பது  ஒரு சூரிய ஆண்டின் “ கும்ப இராசிக்கு  “ இணையானதாகும். அதனால் தான் கோவில் “ கும்பாபிசேகங்களை “ அந்த நேரத்தில் செய்து பிராமணர்கள் வெற்றியடைகின்றனர். காவல் கருப்புகளை கும்பத்தில் கட்டுகின்றனர். 

கழுகு ஏன் ?

ஒவ்வொரு விலங்கு / பறவைக்கும் ஒவ்வொரு திறன் உள்ளது. பொதுவாகவே கழுகுகள் இறந்த சடலத்தின் மீது வட்டமிடுபவை. நடுகல் (Tombstone) என்பது போரில் இறந்த மாவீர்களின் சமாதியின் மீது நடப்பட்டவை. காவல் கருப்புகள் கும்பத்துக்குள் கட்டப்படும் பொழுது அதனை உணர்ந்த கழுகுகள் கும்பத்தின் அருகே பறந்து செல்கின்றன..

ஏன் அசைவம் கூடாது?

உங்கள் காவல் தெய்வங்களைக் கட்டிய பின்னர் 48 நாட்களுக்கு ( 1 மண்டலம் ) உங்களை அசைவ உணவு உண்ணக்கூடாது என்று சொல்வார்கள். ஏன் ?

காவல் கருப்பின் கட்டை உடைக்கக்கூடிய ஆற்றல் சேவல்/கிடாயின் குருதிக்கு மட்டுமே உள்ளது.

ஒரு மண்டலம் நீங்கள் அசைவ உணவைத் தவிர்த்தால் அந்தக் கட்டு பலமாகிவிடும். அது வலுவிழக்க 12 ஆண்டுகள் ஆகும். அதனால் தான் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் கும்பாபிசேகம் செய்ய வேண்டும் என்று பிராமணர்கள்  வலியுறுத்துவார்கள்.

பல கிராமங்களில் இருந்த கோவில்களுக்கு வலியச் சென்று கும்பாபிசேகம் நடத்தினான் காஞ்சி சங்கராச்சாரி. நாமும் அவனை நம்பி சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோம்.

காவல் கருப்புகளைக் கட்டும் தமிழக பிராமணர்களுக்கு அந்த வித்தையைக் கற்றுக்கொடுத்ததே கேரள நம்பூதிரிகள் தான். அவர்கள் ரொம்ப ரொம்ப ஆபத்தானவர்கள். சேரநாட்டையே அடையாளம் தெரியாமல் அழித்தொழித்த அவர்களின் செயல்கள் அடுத்தடுத்த பதிவுகளில் தொடரும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.