03/08/2018

இனிப்பின் இனிப்பான வரலாறு...


டயாபடீஸ்....

இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகம் பயப்படும் அளவுக்கு உருவாக்கப்பட்ட நோய்..

இதற்கு காரணம் இனிப்புகள் என்று கூறப்படுகிறது.

ஆனால் இனிப்பும் சக்கரையும் நமது மூதாதையர்கள் எப்படியெல்லாம் சாப்பிட்டார்கள் என்று தேடிப்பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது...

ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 510 ஆண்டுக்கு முன்பு பெர்ஷியாவிலுல்ல டேரியஸ் என்ற பெயருடைய அரசன் பஞ்சாப் பகுதிகளில் போர் செய்வதற்கு வருகிறான்.

போர் முடிந்து இளைப்பாறும் பொழுது நீண்ட தூரத்தில் சின்ன சின்ன குச்சி போன்ற பயிர் வகையை கண்டு என்ன அது என்று கேட்கிறான்..

காவலன் ஓடிச்சென்று ஒரு குச்சியை உடைத்து அடிப்பகுதியை வெட்டி அரசனிடம் தருகிறான்.

அரசன் முகர்ந்து பார்த்து வாசனை ஒன்றும் பெரிய அளவில் இல்லை என்று உணர்ந்து லேசாக கடித்துப்பார்கிறான்.

கண்கள் அகலவிரித்து அடேங்கப்பா இப்படி சுவையாக இருக்கிறதே தூக்குங்கடா எல்லாவற்றையும் என்று வெட்டி எடுத்து அவன் நாடான ஈரானின் கொண்டு போய் பயிரிட்டு வெளி உலகுக்கு தெரியாமல் அவன் மட்டுமே உண்டு வந்தான்.

ஆமா அது என்ன குச்சி..?
வேறென்ன கரும்பு..

ஆம் கரும்பு  கிமு 500 வரைக்கும் இந்தியர்கள் யாருக்கும் காட்டாமல் ரகசியமாகவே கரும்பை வைத்தனர்.

டேரியஸ் என்ற மன்னன் வரும் வரை.

பின்னர் பழங்கால அரேபிய படையினர் டேரியஸ் இடம் இருந்த கரும்பை எடுத்துக்கொண்டு போய் உலகம் முழுவதும் கரும்பு பற்றிய தகவலை தந்தனர் என்கிறது வரலாறு,

உலகம் முழுவதும் என்பதை குறிக்க ஒரு செய்தியை மட்டும் கூறுகிறேன் இங்கிலாந்து முதல் முறையாக சக்கரை பயன்படுத்திய வருடம்  1099 ல் தான் அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். . .

மிகவும் தாமதமாக வந்த சர்க்கரை  இங்கிலாந்தியர்கள் மத்தியில் எவ்வளவு பெரும் செல்வாக்கு பெற்றிருக்கும். .

சிந்து சமவெளி நாகரிக மக்கள் சர்க்கரை சாப்பிட்டுள்ளனர் என்று வரலாறு உண்டு ஆனால் எப்படி என்ற தகவல் கிடைக்கவில்லை.

முகம்மது நபி இறந்து  200 ஆண்டுகளில் ஐரோப்பாவில் பல கொதிவீடுகள் கட்டப்பட்டது.

இது வயலை ஒட்டி boiling house என்று சொல்லக்கூடிய கரும்பு சாறெடுக்கும் ஆலைகள் கட்டப்பட்டது.

இங்கு ஆப்பிரிக்கா மக்களை அடிமையாக கொண்டுபோய் வேலைக்கு விட்டுவிடுவார்கள்..

மறந்துக்கூட சர்க்கரை ஆலையில் இருந்து கொஞ்சம் சர்க்கரையை எடுத்து நாக்கில் வைத்தால் கூட மரண தண்டனை தான். இப்படி கொலை செய்யப்பட்ட ஆப்பிரிக்க மக்கள் ஏராளம்.

இன்னும் கரும்பு சக்கையை எடுத்து மரத்தில் கட்டி சர்க்கரையை கொஞ்சம் எடுத்து வாயில் போட்ட அடிமையையும் கூட கட்டி தீ யிட்டு எரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

10 இல் இருந்து பல நூற்றாண்டுகள் சர்க்கரையை வைத்தே அந்த நாட்டின் பொருளாதாரத்தை முடிவு செய்துள்ளது அன்றைய உலகம்.

இன்னும் அவ்வையார் காலத்தில் பாலும் தேனும் சர்க்கரை பாகும் பருப்பும் கலந்த ஒரு விதமான இனிப்புகள் உண்டு என்ற வரலாறும் உண்டு.

உலகமே காப்பிக்கு கூட சேர்க்க செமத்தியான ஐட்டம் சர்க்கரை என்று மகிழ்ச்சி அடையும் நேரத்தில்.

நாம புது புது இனிப்புகளை செய்து உண்டு வந்துள்ளோம்...

உணவில் அன்றாடம் இனிப்பு வைத்து பரிமாறிய கூட்டம் நாம் ஆனால் இப்போது 13 வயது சிறுவனுக்கு கூட சர்க்கரை வியாதி,

எப்படி இது சாத்தியம்? 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.