04/05/2017

பாஜக மோடி அரசின் ரயில்வே ஊழலை வெளிப்படுத்திய அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம். தவறான தகவல் தந்ததாக ரயில்வே விளக்கம்...


ரயில்வே கேன்டீன்களுக்கு 100 கிராம் தயிர் ரூ.972-க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக தகவலறியும் சட்டத்தின் கீழ் தகவல் தந்த விவகாரத்தில் அதிகாரிகள் 3 பேரை ரயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

ரயில்வே கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை உயர்ந்து வருவது தொடர்பாக அஜய் போஸ் என்பவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய ரயில்வேயிடம் கேள்வியெழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய ரயில்வே அளித்த பதிலில் 100 கிராம் தயிர் ரூ.972, 1 லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.1242-க்கும், 1 கிலோ உப்பு ரூ.40-க்கும் வாங்கப்படுவதாக கூறியிருந்தது.

இது நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட விவரங்களில் தட்டச்சி பிழை இருக்கலாம் என ரயில்வே நிர்வாகம் கூறியிருந்தது.

இதனிடையே ரயில்வே உதவி வணிக மேலாளரை பணியிட மாற்றம் செய்த ரயில்வே நிர்வாகம், குடோன் கணக்கு பதிவாளர், சமயல் ஆய்வாளர், தகவலறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரி ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.