தமிழர்கள் ஏய்க்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும், நசுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் காலாகாலமாக நடந்து வருகின்ற ஒன்று தான்.
தாக்கினால் திருப்பி அடிப்பார்கள் என்கிற நிலை இருக்கும் போது தான் உலகில் அமைதி நிலவுகிறது.
மலேசியாவிலோ, பர்மாவிலோ, ஈழத்திலோ, கர்நாடகத்திலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் உலகத் தமிழர்களும் தமிழகமும் கொதித்து எழும் என்கிற நிலை இருந்தால் பன்னிரண்டு கோடித் தமிழனைத் தொட எந்தக் கொம்பனுக்கும் உலகில் துணிவிருக்காது.
மாறாக, பர்மாவின் சயாம் நகரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போதோ, கர்நாடகத்தில் தமிழர்கள் வெட்டித் துண்டாடப்பட்ட போதோ, மும்பையிலும் மணிப்பூரிலும் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்ட போதோ, பர்மாவிலிருந்து தமிழர் விரட்டப்பட்ட போதோ, ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் கொடுமையாகக் கொன்றொழிக்கப்பட்ட போதோ, ஆந்திராவில் 20 தமிழர்கள் கொள்ளப்பட்ட போதோ.. தாய்த் தமிழகத்தில் எதிர்ப்பில்லை, கொதிப்பில்லை, கொந்தளிப்பில்லை. காரணம் என்ன? திராவிடம் என்ற நச்சு போதை போல் ஏறி சித்தம் சிதைந்து கிடக்கிறான் தமிழன்...
ஈயும், எறும்பும், புழுவும், பூச்சியும் நசுக்கப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
காகம் ஒன்று கொல்லப்பட்டால் வானத்தையே கருப்பாக்கி காகக்கூட்டம் கரைகிறது..
ஒரு தெரு நாயைத் தாக்கினாலும் ஊர் நாய்களே ஒன்று சேர்ந்து மாந்தக் கூட்டத்தை வறுத்தெடுக்கிறது..
இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிந்தது..
மராத்தியன் பீகாரில் தாக்கப்பட்டால் பதிலடியில் நாடு எரிகிறது.
பீகாரியைத் தொட்டால் வடநாடு கொதிக்கிறது.
இரு இசுரேலியர்களை பாலத்தீனர்கள் சிறைப்பிடித்ததற்காக இரு பாலத்தீனிய நகரங்களை தடைமட்டமாக்கி இசுரேல் பாடம் கற்பித்தது.
உலகமே இப்படி இருக்கும் போது, அது இனப்பற்றாக, இனப்பாதுகாப்பாகப் பார்க்கப்படும் போது தமிழர்நாடு மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன்?
மூத்த இனம் இங்கே முடங்கிக் கிடப்பதே தன் அடையாளத்தை இழந்ததால் தான். தமிழனைத் திராவிடனாக திரித்து சிதைத்து விட்டார்கள்..
மீண்டும் இழந்த தமிழன் என்கிற அந்த அடையாளத்தை நாம் உணர்ந்து தக்க வைத்தால் மட்டுமே எதிர்காலத் தலைமுறையை நாம் பாதுகாக்க இயலும்.
இதில் சமரசம் செய்து கொண்டு அரசியல் களத்தில் ஆராவாரம் செய்து யார் களம் இறங்கினாலும் அவர் தமிழினத்தின் எதிரியாகத்தான் இருப்பார்.
தமிழகத்தைச் சீரழித்தது பெரியார் விதைத்த திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது என்பதே எங்கள் கருத்து...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.