ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் தெரிந்து கொள்ளும் தீர்க்க தரிசனம் 54-ம் பகுதியாகும். தீர்க்க தரிசனத்தின் ஒவ்வொரு வரிகளும் ஆழமான பொருள் பொதிந்தவை. அவைகளை வெறும் சம்பவங்களின் விபரங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், அதன் பின்னணியில் உள்ள பொருள் பொதிந்த இறை இரகசியங்களை இந்த மனித குலம் கண்டு கொள்ள வேண்டும் என எடுத்துக் கூறுகிறது.
அந்த வகையில் இன்று 54-ம் தீர்க்க தரிசனப் பகுதி இனி மக்களுக்கு வருங்காலம் என்பது பலவகையான சோதனைகள் நிறைந்த காலம் என்றும், இது எதனால் இவ்வாறு ஏற்படுகிறது என ஆழ்ந்து சிந்திக்கும் அளவிற்கு பல்வேறு சோதனைகள் நிகழக்கூடும் என்று எச்சரிக்கை செய்கிறது. சோதனைகள் யாவும் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்றும், அச்சோதனைகள் முழுவதும் மனிதகுலத்தை சார்ந்தே அமையும் என்று விளக்கம் கொடுக்கிறது. அதாவது கடல்சார்ந்த சோதனைகள் 35% விழுக்காடு என்றும், பூமி சார்ந்த சோதனைகள் 65% விழுக்காடு என்று 54-ம் தீர்க்க தரிசனம் எடுத்துக் கூறுகிறது.
பூமி சார்ந்த சோதனைகளில் 30% விழுக்காடு மழையாலும், 20% விழுக்காடு விஷ நோய்களாலும், 10% விழுக்காடு பகைமையாலும், 5% விழுக்காடு பொருளாதார வீழ்ச்சியாலும் ஏற்படும் என்று 54-ம் தீர்க்க தரிசனம் மேலும் விளக்கமாக எடுத்துக் கூறுகிறது.
54-ம் தீர்க்க தரிசனத்தில் மேலும் ஒரு சோதனையை பற்றி எடுத்துக் கூறுகிறது. அதாவது மக்கள் மன்றம் என்று அழைக்கப்படும் பொது சேவை மன்றங்களில் பலவிதமான குழப்ப நிலைகள் உருவாகும் சூழ்நிலைகள் உருவாகும் என்றும், இது பெண்கள் சமுதாயத்தை சார்ந்த நிகழ்வுகளாக இருக்கும் என்று அந்த 54-ம் தீர்க்க தரிசனப் பகுதி இங்கு எடுத்துக் கூறுகிறது.
இந்திய தேசத்தின் வரைபடத்தில் உள்ள தென்மேற்கு திசையின் ஒரு பகுதியை ஒரு நாடு சொந்தம் கொண்டாடும் ஒரு செய்தி தற்போது நாட்டில் பரவும் என்றும், இதனை இந்திய அரசு வன்மையாகக் கண்டிப்பதோடு மட்டுமின்றி தக்கபதிலடி கொடுக்கும் என்று 54-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை இங்கு தருகின்றது.
பல்கேரியா நாட்டில் நிலவும் கடுமையான பனிப்புயலால் அந்த நாட்டில் பெரும் சோகச் சம்பவம் ஒன்று தற்போது நிகழ உள்ளதாகவும், உலகின் பல நாடுகள் இதுபோன்ற பனிப்புயல் தாக்குதலுக்கு ஒரே நேரத்தில் ஆளாகும் என்றும், இந்த சம்பவத்தால் உலக விஞ்ஞானிகள் இதற்கான காரணத்தை கண்டறிய முடியாமல் திணறுவார்கள் என்று 54-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு எடுத்துக் கூறுகிறது.
சந்தோஷத்தை அடைமொழியாகக் கொண்ட ஒரு இந்திய அமைப்பு ஒரு புரட்சியை மக்களிடையே ஏற்படுத்திட முயலும் என்றும், இது மற்றொரு ஆன்மீக அமைப்பை எரிச்சல் அடையச் செய்யும் என்றும், இதனால் அந்த, அந்த அமைப்பில் உள்ள பெரிய, பெரிய செல்வந்தர்கள் விலகுவார்கள் என்றும் , அதனால் அவ்வமைப்புகளின் பொழிவு சீர்குலைய ஆரம்பிக்கும் ஒரு நிகழ்வு தற்போது நிகழக் கூடும் என்று 54-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகிறது. மாலை நேரத்தில் மட்டுமே இயங்கும் ஒரு இந்திய ஆன்மீக அமைப்பு காவல்துறை வட்டத்திற்குள் கொண்டு வரப்படும் என்று மற்றொரு குறிப்பையும் 54-ம் தீர்க்க தரிசனம் நமக்கு மேலும் ஒரு விளக்கத்தை தருகிறது.
சமுதாயத்தில் தேசத்துரோகிகள் அதிகம் வளரத் துவங்கி விட்டனர் என்றும், இக்காலத்தில் அவர்களை இனம் கண்டு ஒழிக்கும் படலம் நமது இந்திய தேசத்தில் துவங்கி விட்டது என்றும், அந்த வரிசையில் ஒரு அரசியல்வாதி தற்போது சிக்குவார் என்று 54-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
இருநாட்டு பிரஜைகள் சந்தித்து கொள்ளும் நிகழ்வு அன்று, அந்த இரு நாடுகளிலுமே ஒரு சேர ஒரு சோக நிகழ்வு நடக்க உள்ளதாகவும், இதற்கு ஒரு தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்கும் என்றும், அதன்பின்னர் உலக நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாத அமைப்புகளை முற்றிலும் ஒழிக்க ஒரு மகா அதிரடிப்படையை தேசிய அளவில் அதாவது அந்தந்த நாட்டில் ஒருங்கிணைந்து உலக தரத்திற்கு உருவாக்கும் என்று 54-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது...
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.