உங்கள் மச்சானை நீங்கள் விருது நகர் தொகுதி வேட்பாளராக நிறுத்தியதை கேட்டு மனமுடைந்து விட்டேன்.
குடும்ப அரசியலை எதிர்த்து அரசியல் செய்யும் நாம், இன்று உங்கள் குடும்பத்தில் இருந்தே வேட்பாளரை நிறுத்தியது மிகப்பெரிய அதிர்ச்சி.
விருதுநகரில் வேற எந்த ஒரு வேட்பாளரும் கிடைக்கவில்லையா?.. காளிமுத்து அவர்கள் சபாநாயகர், எம் எல் ஏ அமைச்சர் என்று பல பதவிகளை அனுபவித்தவர், பொறுப்புகளில் இருந்தவர்.. அப்படி இருக்கையில், அவர் வீட்டிலிருந்து தான் இன்னொருவரை நிறுத்த வேண்டுமா? அவருக்கு என்ன தகுதி வேண்டுமானாலும் இருக்கட்டும்.. இன்னொரு தமிழன் குடும்பம் எம் எல் ஏ, எம்பி பொருப்புக்கு வரவைக்கலாமே?
குடும்ப அரசியலை ஒழிக்கனும்னா, முதலில் பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்கள் கட்சியில் பொறுப்பு எடுப்பதையே தவிர்க்கனும். ஒரு தலைமுறை இடைவெளி விட்டால் தான் குடும்ப அரசியலை ஒழிக்க முடியும்.
நீங்கள் தான் சொன்னீர்கள், ஆக சிறந்த குழு வேட்பாளர்களை தேர்வு செய்யும் என்று.... அப்படி இருக்கையில், அந்த ஆகசிறந்த குழுவிற்கு தெரியவில்ல்லையா? களத்திலயும், மேடையிலயும், இணையத்திலயும், தம்பிகள் , தமிழ் தேசிய உணர்வாளர்கள் குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளை எப்படி எதிர்க்கிறார்கள் என்று? இது நடந்தால் லட்சம் தம்பிமார்களுக்கு அவமானமாகும் என்று தெரியாதா?
ஒரு வேளை மச்சான், மிகச்சிறந்த தமிழ் தேசிய சிந்தனை உடையவராக இருந்தால், இந்த வேட்பாளர் தேர்வையே நிராகரித்து இருக்க வேண்டும். ஏனெனில் இன்று திராவிடம், தேசிய கட்சிகளும் குடும்ப அரசியலையும் அல்லகைகளையும் தான் உருவாக்கி வைத்து இருப்பது தெரிந்து இருக்கவில்லையா? இது நமது கருத்தியலுக்கு எதிராக அமையும் என்று தெரியாதா? அப்படி பட்டவர் வேட்பாளரா?
என்னைக்கு மச்சான், மாமன், பிள்ளைகளை போட்டியிட நிறுத்திருங்காளோ, கட்சியில் பொருப்பில் இருப்பவர்கள் அன்று தான், அல்லகைகள் வளையம் உண்டாகும். இதை தானே மேடையில் 8 ஆண்டாக பேசி வருகிறோம்.
உங்கள் மச்சானுக்கு 100% தகுதியே இருந்தாலும், குடும்ப அரசியலை கருத்தில் கொண்டு 98% தகுதியே இருந்தாலும், அடுத்த ஒருத்தருக்கு தான் கொடுத்து இருக்கனும்.
இன்று நீங்கள் செய்யும் இந்த தவறை, உங்களை சுற்றி இருப்பவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள், என்றால், உங்களை சுற்றி இருப்பவர்களும் அல்லகைகள் தான்.. ஏனெனில் தலைமையே கொள்கையை மீறினால், அதை தட்டி கேள்வி கேட்பவன் தான் கட்சியை வளர்க்க உதவுகிறான் என்று அர்த்தம். ஆமா சாமி போடுறவன் எல்லாம் உங்களை கூடே இருந்தே கவிழ்க்கிறான் என்று தான் அர்த்தம்.
அடுத்து செயலாளர், பொருளாளர், மண்டலம், மாவட்டம் என்று அவனவன் மச்சான், மாமன், மகன் என்று தான் நிறுத்த என்ன வேண்டுமானாலும் முயற்சி செய்வான்.
அடுத்தடுத்த தேர்தல்களில் இதை முன்னுதாரணம் காட்டி அந்தந்த தொகுதிகளில் அல்லகைகள் வளையம் உருவாக்கபடும், அவர்களும் தேர்தலில் போட்டியிட சொந்தக்காரங்களை, பிள்ளைகளை நிறுத்த போகிறார்கள் என்று அர்த்தம்.. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நீங்க்ள் இன்று செய்யும் தவறை மேற்கோள் காட்டி பல பேர்கள் இதை செய்வார்கள்.. நீங்கள் வார்த்து எடுக்கும் அரசியல் தகர்ந்து விடும்.
தயவு செய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து, திங்கள் கிழமையாவது வேறு வேட்பாளரை நிறுத்துங்கள், இல்லை அந்த தொகுதியில் போட்டியிடால் கூட போவோம்.. ஆனால் கருத்தியலை சிதைக்காதீர்கள்.
நீங்கள் இந்த தவறுக்கு 1008 காரணம் கற்பிக்கலாம், ஆனால் நமது கருத்தியல் உடைகிறது, என்பது தான் உண்மை!.. இதற்காக உங்கள் தம்பிகள் எவ்வளவு மன வேதனையும், மற்றவர்களிடமும் அவமானமும் அடைய வேண்டும் என்று தெரியுமா?
நமது கொள்கைகளை முதலில் நம்மால் முடிந்ததைதேயே நிறைவேற்ற முடியவில்லை என்றால், ஆட்சிக்கு வந்த பிறகு செய்வோம் என்ற நம்பிக்கையை எப்படி விதைப்பது?
இப்படிக்கு,
உங்கள் அன்பு தம்பி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.