இந்திய அரசாங்கம் தன் மக்களைக் கெடுக்கக்கூடிய, முட்டாளாக்கக்கூடிய அனைத்திற்க்கும் ஆதரவு அளிக்கக்கூடியது, பணம் வரக்கூடிய எதையும் ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பதால் இதற்கு மட்டுமே பணத்தைக் கொட்டிக் கொட்டிச் கிரிக்கெடுக்கு செலவுசெய்தது, மற்ற விளையாட்டுகளை அறவே கைவிட்டது.
இதில் ஈடுபட்ட நம் மக்கள் அறவே தங்கள் கலாச்சாரத்தை மறக்க முடிந்தது. எப்படித் திரைப்பட நட்சத்திரங்கள் உருவானார்களோ அதுபோல கிரிக்கெட் நட்சத்திரங்களும் உருவானார்கள். திரைப்படங்களைப் பற்றிய வெட்டிக்கதைகள் பரவுவதைப்போலவே கிரிக்கெட் நட்சத்திரங்களைப் பற்றிய வெட்டிக்கதைகளைப் பேசியே பொழுதை போக்கினர் இன்னும் இதைப்பற்றி மிக விரிவாக எழுத எவ்வளவோ இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், கிரிக்கெட்டைக் கைவிட்டால், இந்தியா ஒலிம்பிக்கில் பிற விளையாட்டுகளில் மேம்பட்டுச் சிறப்படைய முடியும் ,நம் நாட்டுப்புறக் கலைகளும் விளையாட்டுகளும் மேம்படும்.
இந்த விளையாட்டை அறவே புறக்கணித்து நம் நாட்டுக்குரிய விளையாட்டுகள், கலைகளில் ஈடுபடுங்கள் அல்லது வேறு பயனுள்ள வேலைகளில் பொழுதைச் செலவிடுங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.