தூத்துக்குடி கிறிஸ்தவ பள்ளியில் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிவித்து வந்த மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக லட்சகணக்கில் பக்தர்கள் கூடும் இடம் குலசை முத்தாரம்மன் கோவிலாக உள்ளது. தசரா விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனர். தூத்துக்குடி சின்னக்கோவில் வளாகத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குலசைக்கு மாலை அணிந்து பள்ளிக்கூடத்திற்கு சென்றார்களாம். அவர்களை பள்ளி நிர்வாகம் வலுக்கட்டாயமாக பள்ளியிலிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
இது குறித்து, தகவலறிந்த தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி நிர்வாகிகள் ராகவேந்திரா தலைமையில் பெற்றோர்களுடன் அந்த பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகிகள் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர், தலைமை ஆசிரியர், மாலை அணிவித்த மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க சம்மதித்தார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.