26/08/2020

1953 சித்தூர் மீட்புக்கு தமிழகம் தந்த ஆதரவு...



17.05.1953 தேதியிட்ட இந்த 'செங்கோல்' இதழில் 'சித்தூர் கிளர்ச்சிக்கு ஆதரவு' என்ற தலைப்பு உள்ளது.

கீழே திருவண்ணாமலையில் நடந்த ஊர்வலத்தின் படம் உள்ளது.

சித்தூர் தமிழகத்துடன் இணைய 1953 மே மாதத்தில் தமிழகம் முழுவதும்  ஆதரவான கூட்டங்கள் நடந்ததைக் குறித்து செய்திகள் மாவட்ட வாரியாக உள்ளன.

சென்னையில்,வண்ணையம்பதி (வாணியம்பாடி)யில் பொதுகூட்டம் நடந்தது.

திருச்சி நகரிலும் உறையூரிலும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.

தஞ்சையில்,  திருத்துறைப்பூண்டியிலும் கும்பகோணத்திலும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.

சேலத்தில்,கொண்டாலம்பட்டி பொதுக்கூட்டத்தில் சித்தூர் தினம் கொண்டாடப்பட்டது.

சித்தூரின் 6 தமிழ் தாலுகாக்கள் தமிழகத்துடன் இணைய தீர்மானம் இயற்றப்பட்டது.

கிச்சிப்பாளையத்திலும் சித்தூர் தினம் கொண்டாட்டமும், கிருஷ்ணகிரியில் 3மைல் நீள ஊர்வலமும் நடத்தப்பட்டன.

வட ஆற்காட்டில்,ஆம்பூரில் சர்வகட்சிக் கூட்டமும் கலவையில் கூட்டமும் திருப்பத்தூரில் ஊர்வலமும் நடந்தன.

மதுரையில்,பழனியில் ஊர்வலமும் மேலூரில் சித்தூர் தினக் கொண்டாட்டமும் நடந்தன.

சித்தூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

வள்ளிமலையிலும், அத்திமாஞ்சேரியிலும் பொதுக் கூட்டங்கள் நடந்தன.

திருத்தணியில் சித்தூர் தினம் கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலியில்,சங்கரநயினார் கோயிலில் (சங்கரன்கோயில்) கூட்டம் நடத்தப்பட்டது.

பம்பாயில்,தாராவியில் சித்தூர் தினம் கொண்டாடப்பட்டது.

ம.பொ.சி நடத்திய மண்மீட்பு அறப்போருக்கு தொடர்ச்சியாக ஆதரவு தந்த செங்கோல் எனும் இவ்விதழின் ஆசிரியர் ஆ.கோ. வெங்கட ராமானுஜன் என்று உள்ளது.

பெயரை வைத்தும் முகவரி திருவல்லிக்கேணி என்று இருப்பதை வைத்தும் இவர் பார்ப்பனத் தமிழர் என்று ஊகிக்க முடிகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.