For Every action, there is an equal and opposite reaction...
எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்..
பிரபஞ்சத்தில் ஒலி, அதிர்வு இல்லாத இடமே கிடையாது. ஒலியினால் அதிர்வும், அதிர்வினால் ஒலியும் ஏற்படும் அளவிற்கு இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது.
பழங்காலத்தில், விஞ்ஞானம் இல்லாத காலத்தில் நமது ரிஷிகள், ஞானிகள் இயற்கை நியதிகள் பற்றியும், கர்மா பற்றியும் சொல்லிவிட்டு போயிருக் கிறார்கள்.
தற்காலத்தில் விஞ்ஞானி நீயூட்டன் ஒரு கண்டுபிடிப்பை கூறியது அது கர்மா என்னும் நியதியை உறுதி செய்கிறது.
பிரபஞ்சத்தில் அனைத்தும் ஒரு வட்டப்பாதையில் ( Circle ) பயணிக்கின்றன. தான் புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வரும்போது "போனது திரும்பி வருகிறது" பிரபஞ்சத்தில் ஒவ்வொரு படைப்பும் அதிர்வுகளின் ஆரம்ப புள்ளி.
ஒவ்வொரு மனிதனின் எண்ணம், சொல், செயல்களும் அதன் தன்மைக்கேற்ப அதிர்வுகளை (Action) ஏற்படுத்தும் திறன் கொண்டவை. நமக்குத் தெரியாமலே தானியங்கியாக இது நடந்து கொண்டிருக்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது நடந்து கொண்டிருக்கும்.
இந்த அதிர்வுகள் தனது வட்டப் பாதையில் பல்வேறு இயற்கை நியதிகளுக்கு உட்பட்டு அதன் தன்மைக்கேற்ப நன்மையாகவோ, தீமையாகவோ, பலமாகவோ, பலவீனமாகவோ ஆரம்பமான இடத்துக்கு வருகின்றன. இதை எதிர் சக்தி (Reaction) என்று சொல்லலாம். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அது நடந்து கொண்டிருக்கும்.
பொதுவாக ஒருவருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவரை அநியாயமாய் பாதிக்குமானால் அவரது வேதனைகள் கர்மாவை வலிமையாக்கி தண்டிக்கிறது.
அதேபோல் ஒரு வருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவருக்கு நன்மை செய்து அதனால் அவர் வாழ்த்தும் போது கர்மா வலிய வந்து உதவுகிறது.
நமது நினைப்பு, பேச்சு, செயல் எல்லாம் ஒரு சக்தி ( அதிர்வு ) உற்பத்தியாக காரணமாகிறது. இந்த சக்திக்கேற்ற எதிர் சக்தி புதிய வேகம், பெறும் தன்மை அடைகிறது. தனது எண்ணம், சொல், செயல் நன்மையை நோக்கும் போது நன்மை ஏற்படும்.
பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
ஒவ்வொரு செயலும் அடுத்த செயலுக்கு காரணமாகிறது. அது அப்படியே தொடர்ந்து, முதல் செயல் கடைசி செயலுக்கு காரணமாகிறது.
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் சங்கிலித் தொடரானது. செயலுக்கேற்ற பலன் வராமல் போகாது.
செயலின் நோக்கம், அதற்கு செலவிட்ட சக்தி அதற்கேற்ற பலனைத் தரும்.
எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்.
நமது சூழ்நிலையை நமது ஆழமான எண்ணங்கள் தான் தருகிறது. நமக்கு என்ன வேண்டுமோ அதே எண்ணமாய் இருக்க வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.