ஒரு மனிதன் தன்னிச்சையாகக் காரியங்கள் செய்ய அனுமதிக்கப் படுகிற வரையில்தான் தர்ம நியாயமாக நடந்து கொள்வான்..
மானிட சுபாவம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் சுபாவம் இல்லை. அதேபோல எப்போதும் சமாதானமாக வாழும் சுபாவமும் இல்லை..
விருப்பம் போலக் காரியங்கள் செய்வது அடிமைத்தனம்.தானே வகுத்துக் கொண்ட சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்பது என்பது சுதந்திரம்..
சமூகமானது,உடல் பலத்தின் காரணமாக மனிதர்களிடையே உண்டாகிற சமத்துவமின்மைக்குப் பதிலாக, ஒழுக்க ரீதியான, சட்ட ரீதியான ஒரு சமத்துவத்தை அளிக்கிறது. மனிதர்கள் உடல் பலத்திலும், அறிவிலும் வித்தியாசப்பட்டவர்களாக இருந்த போதும் சட்ட ரீதியாக சமத்துவம் உடையவர்களாக ஆக்குகிறது..
ஒரு தேசத்தில் எவ்வளவுகெவ்வளவு சட்டங்கள் இயற்றப்படுவது குறைவாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அத்தேசம் புகழ் பெறுகிறது..
அரசு அதிகாரிகள் மக்களுடைய எஜமானர்கள் அல்ல. அவர்களுடைய காரியஸ்தர்கள். அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்கள்..
அரசுப்பணி என்பது ஒரு நபருக்குக் காட்டப்படுகிற சலுகை அல்ல. ஒரு நபருக்கு அளிக்கப்படும் பொறுப்பு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.