25/05/2018

காலம் கடந்த மனித உயரம்...


உலகில் தோன்றிய உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய டார்வின் கொள்கையை ஏற்று கொண்டவர்களும், ஏற்று கொள்ள தகுந்த சான்று இல்லை என்று அதை மறுப்பவர்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு கருத்து காலப்போக்கில் மனித சராசரி உயரம் குறைந்து கொண்டே வருவது.

ஆம் நீங்களும் இதை பற்றி யோசித்திருக்கலாம், வரலாற்றில் மிகப் பெரிய ஆதாரங்களும் காணப்படும்.

டார்வின் கொள்கையின் அடிப்படையில் பார்த்தால் ஒரு உயிரினம் பரிமாண வளர்ச்சிப்படி ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு பல மில்லியன் வருடமாக வளர்சிதை மாற்றங்கள் நிகழ்ந்து மற்றொரு நிலையை எட்டும் அல்லது மாறும் அதனடிப்படையில் அது பெற்ற புதிய தகவமைப்பு அதற்கு நன்மை பயக்கும் பட்சத்தில் அது தொடரும், இல்லையேல் அது நீக்கப்படும்.


இக்கண்ணோட்டத்தில் காண்போமானால் மனித வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது.

ஆம் இதுபற்றி பல ஆதாரங்கள் நம் பூமியில் உண்டு.

ஆதி மனிதன் மற்றும் நம் முன்னோர்கள் அனைவரும் பத்தில் இருந்து (11,12) அடி  அல்லது அதற்கு மேற்பட்ட உயரம் உடையவர்கள். அதற்கு ஆதாரமாக பல எலும்புக்கூடுகளும், பல கால் தடங்களும் கிடைத்துள்ளது.

மனிதன் பத்து அடிக்கு மேல் உயரமாக முன்பு இருந்துள்ளான் என்பதற்கு இன்றும் சாட்சியாக சவுதி அரேபியாவில் அல் ஊலாவில் உள்ள 'மத்யன் சாலிஹ்' என்ற கிராமத்தை சொல்லலாம்.

இந்த கிராமத்தில் உள்ள மலை வீடுகள் (படத்தில் காணலாம்) சதாராண மனிதர்களால் வசிப்பதற்கு அது ஏற்றதல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட மலை வீடுகள் என்பது நிரூபிக்கப்பட்டது.

பல வருடங்களுக்கு முன்பு உயரமாக இருந்த மனிதர்களின் சராசரி உயரம் தற்போது ஏன் குறையப்படுகிறது..

ஒரு வேளை நாம் உயரமாக இருப்பது அதாவது நம் உயரமான உடலை ஏந்தி வாழ்வது கடினமாக இருப்பதால் தான் நம் வளர்ச்சி குறைகிறதோ என்னவோ..

அல்லது நாம் அடுத்த பரிமாணத்திற்கு மாறி கொண்டிருக்கிறோமா..


தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அறிவியல் வளர்ச்சியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அதன் தாக்கம் நம் உடலில் தெரிகிறது. இந்த அறிவியல் உலகில் பொதுவாக உடலால் செய்யப்படும் வேலையின் அளவு (தசைகளுக்கு கொடுக்கப்படும் கடின வேலை) குறைந்து கொண்டே வருவதால் இந்த மாற்றம் மற்றும் அறிவியல் வளர்ச்சியால் நம் கால சூழ்நிலைகள், உணவு பழக்க வழக்கங்கள்,நம் உழைப்பின் திறம், பூமியில் ஏற்படுத்தப்பட்ட மாசு இப்படி பல காரணங்கள் கூறலாம்.

என்ன தான் ஜீன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு என்று கூறினாலும் மேலே சொன்ன கருத்தே உண்மை.

நீங்கள் வேற்று கிரக வாசிகளின் படத்தை பழைய எகிப்திய கல்வெட்டுகள் மற்றும் இதுவரை பார்த்த கேள்வியுற்ற அனைவரும் கூறுவது ௩ (3) லிருந்து ௪ (4) அடி தான்.

மேலும் வேற்று கிரகவாசிகள் நம்மை விட அறிவியலில் மேம்பட்டவர்களே இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பை தான் நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோமோ அல்லது மற்றொரு சாரர் கருதுவது போல் வேற்று கிரக வாசிகள் அனைவரும் காலப்பயணம் செய்த எதிர்கால மனிதர்கள் என்ற கருத்தை முன் வைத்தாலும் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனித உயரம் குறைந்து காணப்படலாம்.

எது எப்படியாயினும் நம்மை சோம்பேறியாக மாற்றும் இயந்திரங்கள் நம் முன்னோர்களின் கம்பீர, பிரமிப்பூட்டும் உயரத்தையும், ஆரோக்கியத்தையும் நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.

இது என் அனுமானமும், உண்மையும் கலந்து உருவாக்கப்பட்டு எழுதப்பட்ட கருத்தே ஆனால் இது உண்மைாகும் வாய்ப்புகள் அதிகம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.