25/05/2018

இனி ஸ்டெர்லைட் நிறுவனம் விரிவாக்கம் செய்யவே முடியாது - தீர்ப்பு பற்றிய பாத்திமா பாபு, துரை.நாகராஜன்...


ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பேர் தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்றனர். காவல்துறையினர் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 'ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்குத் தடை' விதித்துள்ளது.

அத்தீர்ப்பில் `தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியில் 2-வது யூனிட் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடைவிதிக்கிறது. ஸ்டெர்லைட் தனது விரிவாக்கத்தைப் புதிய சிப்காட்டில் தொடங்குவதால் நிச்சயம் மக்களுடைய கருத்துகளைக் கேட்க வேண்டும். சுற்றுச்சூழல் தொடர்பாக தடையில்லாச் சான்று வழங்குவது குறித்து மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் செப்டம்பர் 23-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக மத்திய அரசு நான்கு மாதங்களுக்குள் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும். அதுவரை எந்தவொரு கட்டுமானப் பணிகளும் தொடரக் கூடாது. இதுகுறித்து ஜூன் 13-ம் தேதிக்குள் மத்திய அரசு பதில்மனுத்தாக்கல் செய்ய வேண்டும்" என அன்றைய தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.