எண்பது விதமான குறைபாடுகள் இருக்கிறது உடனடியாக நிறுவனத்தை இழுத்து மூடுங்கள் என பல முறை சூழலியல் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்த போதும் மத்திய பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் அந்த நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றுவிட்டு நிறுவனத்தை தொடர்ந்து இயங்க அனுமதி அளித்தார்,
விளைவு யூனியன் கார்பைடு என்கிற அந்த நிறுவனம் வெடித்தது நச்சு வாயு ஊர் முழுக்க பரவி பல்லாயிரம் பேரை பலிகொண்டது, இதுவரை இறந்தவர்களுக்கு நீதியும் இல்லை இழப்பீடும் இல்லை, நிறுவன முதலாளி பால் ஆண்டர்சனை தன் வீட்டில் ஒரு நாள் பாதுகாப்பாக தங்க வைத்து தனி விமானத்தில் தப்ப வைத்தார் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, அரசு எப்போதும் முதலாளிகளின் பக்கம் நின்று அவர்களை பாதுகாக்கும், பல்லாயிரம் தன் சொந்த நாட்டு மக்கள் இறந்த போதும் ராஜீவ் காந்தி ஆண்டர்சனை தான் காப்பாற்ற துடித்தார்...
அதே நிலை தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் க்கும் இதுநாள் வரை பல உயிர்களை பலி எடுத்த ஸ்டெர்லைட் ஒரு நாள் படுகோரமான விபத்தை சந்தித்து பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கலாம் அந்த பேரழிவை தடுக்க இன்று இருபதுக்கும் மேற்பட்ட மண்ணின் மக்கள் தன் இன்னுயிரை தந்து களத்தில் மடிந்து போயினர் தங்களின் போராட்டத்தை கொச்சை படுத்துகிறவர்களுக்கும் சேர்த்தே அவர்கள் செத்துப் போனார்கள்,
அவர்களின் ஈகம் வீண் போகாது ஸ்டெர்லைட் ஒருநாள் மூடப்படும், அதுவரை இழந்த அந்த உயிர்களை போற்றாவிடினும் தூற்றாமலாவது இருங்கள்.....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.