25/05/2018

பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்குகள்...


கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய கிழங்கு, சேனைக்கிழங்குதான். ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை இக்கிழங்கு கெட்டு விடாமல் இருக்கும்.

அதனால் இக்கிழங்கைக் காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்துகிறார்கள்.

இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் ‘யானைக்கால் கிழங்கு’ என்றும் இதை வழங்குகிறார்கள்.

கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், சுவாசகாசம் (asthma) முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை வலுவடையச் செய்யும்.

பெண்கள் முப்பது நாள்களும் பயம் இல்லாமல் சேனைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்குக் கெடுதல் எதுவும் செய்யாத கிழங்கு இது.

கருணைக் கிழங்கு போல் அவித்துச் சாப்பிடக்கூடிய இக்கிழங்கின் 100 கிராம் எடையில், புரதம் 1.2 கிராமும், தாது உப்புகள் 0.8 கிராமும், மாவுச்சத்து 18.4 கிராமும், வைட்டமின் ஏ 434 சர்வதேச அலகும், ரைபோஃபிளவின் 0.07 மி.கிராமும், கால்சியம் 50 மி.கிராமும், இரும்பு 0.6 மி.கிராமும், தயாமின் 0.06 மி.கிராமும், நிகோடினிக் 0.07மி.கிராமும் உள்ளன. கிடைக்கும் கலோரி அளவு 79 ஆகும்.

உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்க இக்கிழங்கை உபயோகிக்கின்றனர்.

ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், தென்னமெரிக்கா, தெற்கு பசிபிக், தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தவிர்க்க முடியாத உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது. இலட்சகணக்கான ஆப்பிரிக்கர்களின் பசியைப் போக்கும் முக்கிய உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது.

குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து, இது. காரணம், உடலை வலுவடையச் செய்யும் சத்து இதில் நிறைய உள்ளது.

இதில் உள்ள சுண்ணாம்பு சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது.

பஞ்சகாலத்தில் கை கொடுக்கும் சத்துணவும், மருந்தும் இதுவாகும். அதனால்தான் ஆப்பிரிக்கர்கள் சேனைக்கிழங்கை முக்கிய உணவாகச் சாப்பிட்டு வாழ்க்கையைச் சமாளிக்கிறார்கள்.

‘பி’ தொகுதி மாத்திரைகளைச் சாப்பிடுகிறவர்கள் அம்மாத்திரைக்குப் பதிலாகச் சேனைக் கிழங்கைச் சாப்பிடலாம்.

அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் விளையும் சேனைக்கிழங்கு மிகவும் பிரபலமானது. அது சாதாரணமாய் இருபது முதல் நாற்பது கிலோ வரை எடை கொண்டதாய் இருக்கிறது.

தென்னமெரிக்கர்கள் இதைக் கால்நடைகளுக்கும், உணவாகக் கொடுக்கின்றனர். இதனால் அவை ஊட்டத்துடன் நன்கு வளர்கின்றன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.