09/09/2018

பூம்புகார் மர்ம முடிச்சி - 2...


ஏற்கனவே பூம்புகார் ஆரம்பித்த விஷயத்தை சொன்னேன் அதில் இந்திய அரசு பணம் இல்லையென்று கைவிரித்தது என்றும் சொன்னேன்.

அதே அரசு இல்லாத துவாரகையை துருவி பலகோடியை விரயம் செய்ததையும் சொன்னேன் பின்பு
இந்தியாவே தலை குனிவை ஏற்படுத்துகிற செய்தி என்று ஒன்றை சொன்னேன்.

அது என்ன தெரியுமா ?

இவ்வளவு பெரிய இந்தியா பணம் இல்லையென்று கைவிரித்த நிலையில்
இங்கிலாந்தை சேர்ந்த கிரஹாம் ஹான்காக் இந்தியா வருகிறார்.

இவர் உலக கடல்வாழ் ஆய்வில் தேர்ச்சி பெற்றவர் இவரது ஆய்வுகளை பல பல்கலை கழகங்கள் அங்கீகரித்துள்ளது...

கோவா சென்ற அவர் பூம்புகார் சம்பந்தப்பட்ட ஏடை தூசு தட்டி அது சம்பந்தமான விபரங்களை கேட்டு கொண்டு அவர் பயணப்பட்டார்.

பூம்புகாரை நோக்கி...

ஆய்வு செய்ய நான் தயார் அதற்கான பணம் எங்கே போவது இந்தியா கைவிரித்து விட்டதே என்று யோசித்த அவர்..

தொடர்பு கொண்டார் இங்கிலாந்தை சார்ந்த சேனல் 4 என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை..

அவர்கள் இவ்வளவு பாரம்பரியமிக்க ஆய்வுக்கு நாங்களும் குறிப்பிட்ட பணத்தை தருகிறோம் என்றது..

இன்னும் பணம் தேவையே என்றுணர்ந்த கிரஹாம் அமெரிக்காவை சார்ந்த லேர்னிங் சேனல் என்ற நிறுவனத்திடமும் பேசி ஒப்பந்தம் போட்டு ஆய்வில் இறங்குகிறார்..

இது தான் இந்தியாவுக்கே கேவலம்..

இந்தியாவில் உள்ள மிகவுமே பழமையான நாகரீகத்தை இந்தியா கேவலம் பணம் இல்லையென்று ஒதுக்கும்பொழுது..

எங்கிருந்தோ வந்து நான் பாத்துக்குறேன் என்று அங்கே இங்கே என்று பணத்தை தயார் செய்து ஆய்வாய் வெளியிட..

அயலவனுக்கு என்ன தலைவிதியா ?

அவனுக்கு தெரிந்த பொக்கிஷம் இங்குள்ள வட மாநிலத்தவனுக்கு தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்..

இதே பூம்புகார் நகரம் குசராத்திலோ மத்திய பிரதேசத்திலோ இருந்து இருந்தால் இந்நேரம் இந்தியாவே அங்கு தான் கண் வைத்து இருக்கும்..

பூம்புகார் இருப்பது தமிழர்கள் நகரில் அல்லவா அப்படிதான் செய்யும் இந்த பார்ப்பனிய கும்பல்..

இவர் ஆய்வில் தெரிந்த விஷயங்கள்...

கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யமே புதையுண்டு
கிடப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்..

அதன் வயது தான் வட நாட்டு கும்பல்களுக்கு எரிச்சலாக மாறியது.

ஐஸ் ஏஜ் என்று சொல்லக்கூடிய பனிக்கட்டி காலத்தில் ஐஸ் உருகி இந்நகரம் மூழ்கி இருக்கலாம் என்று சொன்னார் .

இந்த ஐஸ் ஏஜ் காலம் எவ்வளவு தெரியுமா ?

சுமார் 17 ஆயிரம் ஆண்டுகள்..

வரலாற்று சிதைவுகள் படி சுமார் 11 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது இந்த நகரம் மூழ்கி என்று அறிக்கையை சமர்ப்பித்தார்..

இங்கும் சில தமிழ் விரோதிகள் கேள்வி எழுப்பினர் அதாவது பனிக்காலம் நடந்தது 17 ஆயிரம் ஆண்டுகள் பூம்புகார் பற்றி நீங்கள் சொல்வது 11 ஆயிரம் ஆண்டுகள் அப்படியானால் எப்படி சாத்தியம் என்றார்கள்.

இதற்கு விடை என்ன தெரியுமா ?

இந்த பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக தான் உருகின அதன் உருகு தன்மை சுமார் 7 இல் இருந்து 5 ஆண்டுகள் தொடர்ந்ததாக சொல்லுகிறார்கள்.

அப்படி பார்க்கப் போனால் பூம்புகார் 11 ஆயிரத்து 500 வருடங்கள் ஆகிறது ...

அப்பா எவ்வளவு பெரிய நாகரீகம் இது.

மெசபொமிய ஹரப்பா முகாசத்தாரோ சிந்து சமவெளி இவற்றுக்கெல்லாம் முன்னோடி இந்த பூம்புகார் தான் ....

இப்படிப்பட்ட அதிசயத்தை இந்தியா [வட மாநில] கும்பல் விட்டு வைக்குமா ?

தடைவிதித்து இந்த ஆய்வை வெளியிட..

காரணம் தமிழர்கள் எங்களை மிகைத்து விடுவார்கள் என்று பயந்து ..

ஆனாலும் வெளியிடப்பட்டது எங்கே தெரியுமா ?

தமிழ்நாட்டில் அல்ல

பிறகெங்கே ?

பேசுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.