09/09/2018

பூம்புகார் மர்ம முடிச்சி - 1...


பூம்புகார் பல மர்மங்களுக்கு விடை தெரியாத புதிர்..

இப்படியாக இந்த பூம்புகாரை நீங்கள் வாசித்தது இல்லை தொடராக வரக்கூடிய இந்த பதிவினை முழுவதும் படியுங்கள் இறுதியில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்..

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் கோவாவில் உள்ளது.

1990 ஆண்டு இந்நிறுவனம் பூம்புகாரை ஆய்வு செய்யப்போவதாக அறிவித்தது.

தொடர்ந்து 3 ஆண்டுகள் ஆய்வுகள் செய்தது, அதில் பூம்புகாரில் இருந்து 3 கிலோமீட்டர் சுற்றுப்பகுதியில் பல கிணறுகள் இருப்பதை கண்டு பிடித்தது.

இதன் தொடர்ச்சி தரங்கம்பாடி வரையில் இருப்பது கண்டு பிடிக்க பட்டது.

ட ;வடிவ கட்டிடங்கள் மற்றும் சங்ககால பொருட்களையும் கண்டு பிடித்தது.

அக்காலகட்டத்தில் தொல்லியல் துறையை சார்ந்தவர்கள் மற்றும் இலக்கிய மனிதர்களிடமும் பெரும் சந்தோஷத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி கொண்டு இருந்த நேரம் அது.

காரணம் நமது முன்னோர்களது பொருட்கள் மற்றும் தமிழர்களின் நாகரீகங்கள் தமிழர்களுக்கு பெருமை சேரக்கூடிய அம்சங்கள் அதில் இடம் பெற்று இருந்தது.

இன்னும் தோண்ட தோண்ட பொக்கிஷங்கள் தமிழர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு கிடைக்கும்.

தமிழன் தலை நிமிர்ந்து நிற்கலாம் என்றெல்லாம் தமிழ் அறிஞர்கள் உட்பட அனைவரும் சந்தோசப்பட்டு கொண்டு இருக்கும் வேளையில்..

இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டது அந்த அறிக்கை என்ன தெரியுமா ?

போதிய நிதி பற்றாக்குறையால் இந்த பூம்புகார் நகர ஆய்வை நாங்கள் நிறுத்துகிறோம் என்றது..

[கீழடி நினைவில் வருகிறதா தொடருங்கள்]..

இது அப்படியே இருக்கட்டும் ..

இன்னொருபக்கம் இதே காலகட்டத்தில்  குஜராத்தில் உள்ள துவாரைகளை அகழ்வாய்வு செய்து கொண்டு இருந்தது இந்திய அரசு.

பூம்புகாரை விடவும் பல கோடி செலவில் துவாரைகள் ஆய்வு செய்யப்பட்டது.

காரணம் என்ன தெரியுமா ?

துவாரகை கண்ணன் வாழ்ந்ததாக சொல்லப்படுகிற நகரம்.

சிந்துசமவெளிக்கு முந்தைய நாகரீகம் துவாரகை நாகரீகம் என்ற பொய்யை அறிவிக்க முயற்சி எடுத்த அத்தனையும் வீண்.

ஆகவே கண்ணனை வரலாற்றில் காண்பித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பல கோடியை கொட்டி ஆய்வு செய்த இந்திய அரசுக்கு எதிர்பார்த்தது கிடைக்கவில்லை.

ஆகவே பல கோடி வீண் செலவு...

அதே வேளையில் ஒரு நகரமே தண்ணிக்கு அடியில் இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்.

அது பழங்காலமாக மொசப்படிமியா விட மிகப்பழமையான தமிழர்களின் நாகரீகத்தை வட நாட்டு கும்பல் எப்படி தான் சகிக்கும்.

கீழடி புறக்கணிக்க பட்டதற்கு இப்பொழுது காரணம் புரிகிறதா ?

ஆனால் விடவில்லை இந்த பூம்புகார் நகர ஆய்வு ?

பின்பு எப்படி ஆய்வு தொடரப்பட்டது.

இந்தியா கைவிரித்த நிலையில் யாரால் முடியும் ?

ஆனாலும் முடியும்.

எப்படி ?

இந்தியாவே தலை குனிவை ஏற்படுத்துகிற செய்தி தான் அது.

சரித்திரம் தொடரும்..

காத்திருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.