SC/ST வன்கொடுமை சட்டத்தை வலிமையாக்கும் பாஜக அரசுக்கு எதிராக, மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பிற்படுத்தப்பட்ட OBC வகுப்பினரும், பொதுப்பட்டியல் வகுப்பினரும் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்துகின்றனர்.
பிரதமர் மோடியின் சொந்த நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் அவரது உருவபொம்மை எரிக்கப்பட்டது. மத்திய பிரதேசம், ராஜாஸ்தான் மாநிலங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
மத்திய பிரதேச முதல்வரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. பல இடங்களில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடக்கப்பட்டுள்ளனர்; போராட்டக்காரர்களின் கேள்விகளை எதிக்கொள்ள முடியாமல் பலர் தலைமறைவாகி உள்ளனர்.
SC/ST வன்கொடுமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: பின்னணி என்ன?
SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் அப்பாவிகள் தண்டிக்கப்படுவதை தடுப்பதற்காக - இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுகிறவர்களுக்கு பிணை வழங்க வேண்டும், அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் விசாரணை நடத்தி போதிய ஆதாரம் இருப்பதாக கருதினால் மட்டுமே வழக்கு தொடுக்க வேண்டும் - என உச்சநீதிமன்றம் மார்ச் மாதம் 20 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
அதாவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பாதுகாப்பளிக்கும் இந்த சட்டத்தினை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறவில்லை. மாறாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து அப்பாவிகளை விசாரணை இல்லாமல் தண்டிக்கக் கூடாது. போதுமான ஆதரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களை மட்டுமே தண்டிக்க வேண்டும் என்றது உச்சநீதிமன்றம்.
நாட்டின் மிகப்பெரும்பாலான குற்றங்களில் நீதி இவ்வாறுதான் நிலைநாட்டப்படுகிறது. குற்றம் சாட்டப்படுவதாலேயே யாரும் குற்றவாளியாக கருதப்படக் கூடாது. உரிய விசாரணையின் கீழ் குற்றம் மெய்ப்பிக்கபட்ட பின்னரே குற்றவாளியாக கருதப்பட வேண்டும் என்பதே இயற்கை நீதி. இதைத்தான் SC/ST வன்கொடுமை சட்டத்திலும் உச்சநீதிமன்றம் நிலைநாட்டியது.
ஆனால், இந்த நியாயமான தீர்ப்பை எதிர்த்து மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தி, SC/ST வன்கொடுமை சட்டத்தின் அநீதியான பிரிவுகளை நீட்டிக்கச் செய்யும் சட்டத்திருத்தத்தை ஆகஸ்ட் 9 ஆம் நாள் மோடி அரசு கொண்டுவந்தது. அதனை எதிர்த்து தான் தற்போது வடமாநில மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு் OBC மற்றும் பொதுப்பட்டியல் பிரிவுகளை சேர்ந்த 35 அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதனிடையே, புதுதில்லி அருகே உள்ள நொய்டா மாநகரின் குடியிருப்போர் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து, இச்சட்டத்துக்கு எதிராக, கூட்டாக போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கல்ராஜ் மிஸ்ரா - மத்திய அரசின் சட்டத்திருத்தத்தை மறு ஆய்வு செய்ய கோரியுள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.