14/11/2020

எடையை குறைக்கும் பட்டை இஞ்சி தேநீர்...

 


எடையை குறைக்க பலர் காலை வேளையில் பல வழிகளை மேற்கொள்வார்கள். அப்படி காலை வேளையில் எடையை குறைக்க நீங்கள் முயற்சிப்பவரானால், பட்டை இஞ்சி தேநீர் குடியுங்கள்.

இதனால் உடல் எடையானது விரைவில் குறையும். மேலும் உடலும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்புடன் இருக்கும். இங்கு எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி தேநீரை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து காலையில் செய்து குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

பட்டை - 2 அங்குலம்

இஞ்சி - 1/2 அங்குலம் (துருவியது)

கறுப்பு தேயிலைகள் - 1 தேக்கரண்டி

எலுமிச்சை - 2 துண்டுகள்

புதினா - 5-6 இலைகள்

தேன் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும். பின்பு தேயிலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து குடிங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.