14/05/2017

மே17 இயக்கத்திற்கு.. கீழடி குறித்த எனது கேள்விகள்...


கொந்தகை என்கிற  ஊராட்சிக்கு  உட்பட்ட பகுதி தான் கீழடி..

திருமுருகன் காந்தி அவர்கள் கொந்தகை என்னும் பெயரை  தப்பி தவறி  கூட சொல்வதில்லை எதனால்?

பூம்புகார் நாகரீகம் 9 ஆயிரம்  ஆண்டுகள் பழமையானது, ஆதிச்சநல்லூர்  நாகரீகம் பத்தாயிரம்  ஆண்டுகளை கடந்தது, 50 ஆயிரம் ஆண்டுகளை கடந்த  லெமூரியா  நாகரீகம், அத்திரப்பாக்கத்தில் கண்டு பிடிக்கப்பட்ட  15 லக்ஷம்  ஆண்டுகள் பழமை  வாய்ந்த கற்கோடாரி  என்று இதுவரை தமிழர்களின் பல தொன்மையான  நாகரீகங்கள்  கண்டு பிடிக்கப்பட்டு  உள்ளது.

அவ்வளவு ஏன்? தொடர்ந்து 9 ஆயிரம்  ஆண்டுகளாக  இயங்கி  கொண்டிருக்கும் ஒரே நகரம் இந்தியாவில் மதுரை மட்டுமே.

கீழடி 2500 ஆண்டுகள் பழமையான  நாகாரீகம் அவ்வளவு  தான்.

ஆனால் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் 3600 ஆண்டுகளுக்கு  முன் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது.

இது குறித்து சந்தேகம் இருந்தால்  ஐயா Orissa Balu மற்றும் ஐயா  ஐராவதம் மகாதேவன்  ஆகிய இருவரிடமும் திரு முருகன் காந்தி  அவர்கள்  கேட்டு  தெரிந்து கொள்ளலாம்.

ஐயா ஒரிசா பாலு, ஐயா ஐராவதம்  மகாதேவன் இருவருமே  மிக சிறந்த  தமிழ் ஆர்வலர்கள்  அதே சமயம் archaelogy Department டை  சேர்ந்தவர்கள்.

கீழடியில் ஹிந்து மதம், ஆரியம்  குறித்த எந்த சுவடும்  கண்டு பிடிக்கவில்லை. தமிழர்களின் வாழ்வில் ஆரியம் புகுவதற்கு முன்  உருவான   நாகரீகம்  கீழடி என்று எதற்கு? திருமுருகன் காந்தி  அவர்கள் திரும்ப, திரும்ப  சொன்ன பொய்யையே  சொல்லி கொண்டிருக்கிறார்.

ஆரியம் என்றால் என்ன என்பதை  பற்றி ஏற்கனவே  பக்கம், பக்கமாக  என் போன்ற பலர் எழுதியாச்சு.

ஆரிய, திராவிட வாதம் செய்வது  எனது நோக்கம்  அல்ல.

2500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் அனைவருமே  இறை  நம்பிக்கை இல்லாமல் இருந்தார்கள்   என்று திருமுருகன் காந்தி அவர்கள் சொல்வது சீப்பு, சீப்பா  வரலை.

பத்தாயிரம், பதினைந்தாயிரம் ஆண்டுகள் பழமை  வாய்ந்த  பல சிவன், பெருமாள், அம்மன் விக்ரகங்கள்  எவ்வளவு? இதுவரை தமிழ்நாட்டில்   அகழாய்வில் கண்டு பிடிக்கப்பட்டு  உள்ளது என்பது ஐயா ஒரிசா பாலு, ஐயா ஐராவதம் மகாதேவன் போன்றவர்களுக்கு தெரியாதா என்ன?

சிவன் இருப்பதாக சொல்லப்படும் கயிலை  மலையை  காட்டிலும் திருவண்ணாமலை  பல லக்ஷம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

சைவம், வைஷ்ணவம் என அனைத்துமே தோன்றியது  இந்த தமிழ் மண்ணில்  தான்.

12 ஆழ்வார்களும் 63 நாயன்மார்களும் அவதரித்த  புண்ணிய பூமி  இது.

திரு முருகன் காந்தி அன்னே. சும்மா வாயால் வடை  சுடாதீங்க.

கீழடியில் ஆய்வு நிறுத்தப்பட்டது  தவறு தான்.

ஐயா அமர்நாத் போன்றவர்கள் அரும்பாடு பட்டு  செய்த ஆய்வு இந்த கீழடி.

அமர்நாத் போன்றவர்களை கீழடியில் இருந்து எதனால்? மத்திய  அரசு இடமாற்றம்  செய்தது என்பதற்கான விளக்கத்தை தமிழக மக்களுக்கு  கொடுக்க வேண்டியது  மத்திய அரசின் கடமை.

நிறுத்தப்பட்ட கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற பல ஆய்வுகளை  மீண்டும்  தொடங்க வேண்டும் என்று திரு முருகன் காந்தி அவர்கள் போராடினால் அவர்  பின்னே என் போன்ற  பலர் அணிவகுக்க தயார்.

இனி திரு முருகன் காந்தி அவர்கள் இதுபோல் உளராது இருக்க வேண்டும்.

அண்னன்  திரு முருகன்  காந்திக்கு ஆரிய பவன் இட்லி பார்சல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.