தஞ்சை திருவாரூர் சாலையில் நீடாமங்கலத்துக்கு சற்று முன்னே இருக்கின்ற சிற்றூர் கோயில் வெண்ணி.
சங்க காலத்தில் தமிழ் சரித்திரம் அறிந்த முதற்போர் (அக்காலத்தில் வெண்ணிப் பரந்தலை என்று அழைக்கப்பட்ட) இங்கு தான் நடைபெற்றது.
கரிகால் பெருவளத்தான் என்று அறியப்படும் திருமாவளவனுக்கும் அவனுடைய தாயாதியருக்கும் இடையில் நடந்த இந்தப் போரைப் பற்றி பல்வேறு சங்கப்பாடல்களில் காணப்படுகிறது. முக்கியமாக பட்டினப்பாலை...
பல்ஒளியர் பணிபு ஒடுங்க
தொல் அருவாளர் தொழில் கேட்ப
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல்கெடச் சீறிமன்னர்
மன்எயில் கதுவும் மதனுடை நோன்தாள்
மாத்தானை மற மொய்ப்பின்
செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப்
புன்பொதுவர் வழி பொன்ற
இருங்கோவேள் மருங்கு சாயக்...
என்று இருங்கோவேளையும் அவனுக்கு துணை வந்த பாண்டியனையும் எவ்வாறு திருமாவளவன் வெற்றி கொண்டான் என்று விவரிக்கிறது.
ஒரு பெரும் படையை இளமையிலேயே பெரு வெற்றி கொண்டான் கரிகாலன் என்று போற்றுகின்றனர் சங்க காலப் புலவர்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.