தமிழக அரசியல் தற்போது மீண்டும் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்தன. ஓ பன்னீர் செல்வம் துணை முதல்வராக பதவியேற்றார். அமைச்சரவையில் மா.பா பாண்டியராஜன் மீண்டும் பொறுப்பேற்று கொண்டார்.
சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் அறிவிப்பு வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த தினகரன் ஆதரவாளர்கள் இன்று கவர்னரை சந்திக்கின்றனர்.
இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலளார் வைகோ இன்று கருணாநிதியை சந்திக்க உள்ளார். இன்று மாலை கோபாலபுரம் இல்லத்திற்கு செல்லும் அவர் கருணாநிதியிடம் நலம் விசாரிக்கிறார். அவருடன் திருப்பூர் துரைசாமி செல்கிறார்.
அதிமுக அணிகள் இணைந்துள்ள நிலையில் வைகோவும் கருணாநிதியை சந்திப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஒரு இணைப்புக்காக அச்சாரமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதற்கு முன்பு கடந்த 2014ம் ஆண்டு அருள்நிதி திருமண விழாவில்தான் கருணாநிதியை வைகோ சந்தித்து இருந்தார். சுமார் 3 வருடங்களுக்கு பிறகு கருணாநிதியை வைகோ சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.