1799 இல் பிரிட்டிஷ் ஆளுநர் நோக்ஸ் என்பவரது உதவியாளரான பேராசிரியர் கிளைக்கோர்ன் எனும் ஸ்காட்லாந்து இனத்தவர் ஒரு குறிப்பு எழுதியுள்ளார்.
அது வருமாறு,
இலங்கைத் தீவானது மிகப் பழங்காலந்தொட்டே இரு வெவ்வேறு தேசிய இனங்களால் உரிமை கொண்டாடப்பட்டது.
இத்தீவின் நடுப்பகுதியும் தெற்குப் பகுதியும் மற்றும் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் ஆறு வரையுமுள்ள மேற்கு பகுதியும் சிங்கள நாட்டினத்தால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும்.
இத்தீவின் வடக்கு கிழக்கு நிலப்பகுதிகள் தமிழரால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும்.
இரு நாட்டினங்களும் சமயத்தாலும், மொழியாலும் வாழ்க்கைப் பண்பாலும் முற்றிலும் வேறுபட்டவை.
தமிழர் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்தனர் போலும்.
ஏனெனில் அக்கரையில் உள்ள அதே மொழி அதே பழக்க வழக்கங்கள் அதே சமயம் என்பனவற்றைக் கொண்டுள்ளனர்.
இக்குறிப்பில் சிலாபம் ஆறு எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மத்திப் பகுதியும் தென் பகுதியும் சிங்களர் வாழ்விடமாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் தெற்கே உள்ள வளவி ஆறு மேற்கில் இருப்பதாக தவறாக உள்ளது.
இவர் உதவியாளராக இருந்த முதல் பிரிட்டிஷ் ஆளுநர் நோக்ஸ் (knox) எழுதிய நூல் ஒன்று உள்ளது.
கண்டி சிறையிலிருந்து தப்பித்து மன்னார் நோக்கி செல்லும்போது மல்வத் (அருவி)ஆற்றைக் கடந்து அனுராதபுரம் வந்தடைந்தபோது அங்கே யாருக்குமே சிங்களம் தெரியவில்லை என்று அந்நூலில் எழுதியுள்ளார்.
ஆற்றின் பெயர் சிங்களத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து அருவியாறு அனுராதபுரம் அருகே வரும் இடம் வரை சிங்களவர் வாழ்ந்ததாக கொள்ளலாம்.
அலெக்சாண்டர் ஜான்ஸ்டன் (Alexander johnston) 1806 இல் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.
இவர் 1807 நம்பர் 4 இல் எழுதிய கையெழுத்து குறிப்பு ஒன்று கொழும்பு அருங்காட்சியம் பாதுகாத்து உள்ளது.
அது வருமாறு,
வடமேற்கில் உள்ள புத்தளம் முதல் தென்கிழக்கே உள்ள குமணை ஆறு வரை உள்ள நிலப்பகுதி வரை தமிழரின் குடியிருப்பு ஆகும்.
மேற்கே சிலாபம் ஆற்றிலிருந்து தென்கிழக்கே உள்ள குமனை ஆறு வரை உள்ள நிலப்பகுதி சிங்களவரின் குடியிருப்பு ஆகும்.
இதிலும் சிலாபம் ஆறு எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு எல்லையாக குமணை ஆறு குறிக்கப்பட்டுள்ளது. இதுவே சரியான வரையறையாகும்.
குமனையாறு கடலில் கலக்கும் இதுவே தமிழரின் தென்கோடி எல்லை.
மேற்கண்ட விபரங்கள் ஜே.ஆர்.சின்னத்தம்பி எழுதி 1977 இல் சென்னையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட "தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்" எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டன.
நான் ஏற்கனவே வெளியிட்ட தமிழர்நாடு இறுதிசெய்யப்பட்ட வரைபடம் இந்த எல்லைகளையே கொண்டிருந்தது.
புலிகள் பயன்படுத்திய ஈழ வரைபடம் தவறானது ஆகும்.
அவ்வரைபடத்தில் தெற்மேற்கு எல்லை சிலாவ ஆற்றையும் தாண்டி நீள்கிறது.
தவிர அவ்வரைபடத்தில் அனுராதபுரம் சேர்க்கப்படவும் இல்லை.
புலிகளின் வரைபடத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு மிக குறுகிய பகுதியாக உள்ளது.
புத்தளம் மாவனடம் வடக்குடன் இணையும் பகுதியும் குறுகலாக உள்ளது.
கிழக்கு பகுதியும் ஒடுங்கலாக வரையப்பட்டு இருந்தது.
ஆனால் புத்தளத்துக்கு வடக்கிலும்
கிழக்கு மாவட்டங்களிலும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி அவர்களது வரைபடத்தில் உள்ளதை விடவும் பெரியதாகவும் அகலமாகவும் இருந்தது.
பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம்" புத்தகத்தில் இருந்த புலிகள் ஆண்ட பகுதி வரைபடம் மூலமாக இது அறியக்கூடியதாக இருக்கிறது.
எனவே 1800 களில் எழுதப்பட்ட குறிப்புகளின் படி 1832 இல் வெளியிடப்பட்ட ஒரு வரைபடத்தில் எல்லைகளைக் குறித்து அன்றைய எல்லையை வரைந்துள்ளேன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.