17/09/2020

கர்நாடகாவிலோ, ஆந்திராவிலோ, கேரளாவிலோ திராவிடம் என்ற வார்த்தைக் கூட இல்லையே ஏன்?


தமிழ் நாட்டில் மட்டும் திராவிட முன்னேற்ற கழகங்கள், இயக்கங்கள், தலைவர்கள் என வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்..

தமிழ் நாட்டில் திராவிடம், திராவிடம் என்று பலர் விடாப் பிடியாக பிடித்து தொங்குவதற்குக் காரணம், திராவிடர் என்னும் போர்வையில் ஒளிந்துக் கொண்டு தெலுங்கரும், கன்னடரும், மலையாளியும் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்பதே..

அண்டை மாநிலங்களில் எல்லாம் கன்னட நடிகர்கள் சங்கம், மலையாள நடிகர்கள் சங்கம், தெலுங்கு நடிகர்கள் சங்கம் என்று தான் இருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டில் மட்டும் தென்னிந்திய நடிகர்கள் சங்கமாம்..

தற்போது, இந்த நடிகர் சங்கத் தலைவர் பதவியை, தெலுங்கன் விஷால் ரெட்டி என்னும் நடிகன் அடைந்து விட்டான்..

எனக்கு சில கேள்விகள்...

விஷாலுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?

அவர் வேண்டுமென்றால், அவர் மாநிலத்தில் சென்று நடிகர் சங்கத் தலைவராகட்டும், இல்லை மாநில முதல்வராகட்டும், எவரும் கேட்கப் போவதில்லை.

ஆனால், அடுத்தவனுக்கு பரிமாறியுள்ள உணவை பறித்து திண்ணும் (எச்சி பொறுக்கும் வேலையை) வேலையை இந்த திராவிடர் போர்வையில் இருக்கும் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் எப்போது விடுவார்கள்?

எல்லா மாநிலத்திலும் அந்தந்த மண்ணின் மக்களின் ஆளுமையே இருக்கிறது. பிற மொழி மக்கள் அதிகப்படியாக வசித்தாலும், அந்த மாநில மண்ணின் மைந்தர்களில் கட்டுப் பாட்டுக்குள்ளேயே அவர்கள் இருப்பார்கள்..

உதாரணமாக, பெங்கலூருவில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்கள் கர்நாடக மண்ணின் மைந்தர்களை மீறி எதுவும் செய்து விட முடியாது..

கேரளாவை மலையாளி ஆள்கிறான்,
ஆந்திராவை தெலுங்கன் ஆள்கிறான்.
கர்நாடகாவை கன்னடன் ஆள்கிறான்.

ஆனால், தமிழ் நாட்டை மட்டுமே திராவிடன் ஆள்கிறான்...

நமது தமிழ்ச் சொந்தங்களின் அறியாமையாலும், பெருந்தன்மையாலும், இயலாமையாலும், கண்டவனை எல்லாம் தலைமை ஏற்று வீண் போனதாலும், ஏழ்மையாலும் இன்று வரை இந்த இழி நிலை தொடர்கிறது..

நன்றாக தமிழ் தமிழ் என்று வீர வசனமெல்லாம் பேசுகிறார்கள் அனைத்துத் திராவிட இயக்கத் தலைவர்களும், ஆனால், எதாவது ஒரு தமிழர் வாழ்வாதாரப் பிரச்சனை, உயிர்ப் பிரச்சனை என்றால், வாய் மூடி மௌனிக்கிறார்கள். இல்லையென்றால், தமிழ்ச் சமுதாயத்திற்கு எதிரான நிலைப் பாட்டை எடுக்கிறார்கள்..

தமிழ் நாடு தமிழருக்கே. ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு என்பதை தமிழர்கள் நிலை நாட்டினால் மட்டுமே திராவிடர் என்ற போர்வையில் தமிழரின் எச்சில் இலையிலிருந்து உணவை பறித்துச் செல்லும் திராவிடர்கள் திருந்துவார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.