தீபாவளி என்பது நரகாசூரன் என்னும் காமரூப (அசாம்) கொடுங்கோலன் இறந்ததற்காகவோ, இராமன் மீண்டும் அயோத்தி வந்ததற்காகவோ ( திரும்பி வந்தது சித்திரை) தமிழர்களால் கொண்டாடப்படுவதில்லை..
இது முன்னோர் வழிப்பாட்டு திருவிழா..
ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயணம் எனப்படும் (தென்முகப்பயணம்).
இந்த காலங்களில், சூரியன் தனது சக்தியை இழந்துக்கொண்டே வரும்.
ஆடியில் சூரியன் தன் ஒளியை இழக்கத் தொடங்கி, ஐப்பசியில் முழுவதுமாக நீச்சம் பெற்றுவிடும்.
மீண்டும் சூரியன் தன் ஒளியை உத்திராயணம் (வடமுகப்பயணம்) தொடங்கும் தையில் பெறத் தொடங்கி, சித்திரையில் உச்சம் அடையும்.
அதனால் தான் சூரியன் உச்சம் பெறும் சித்திரையில் தெய்வங்களுக்கு விழா எடுப்பர்.
அதே வேளையில், சூரியன் நீச்சம் பெறும் ஐப்பசியில் , அதிலும், நிலவு ஒளியிழந்திருக்கும் அமாவாசையில் முன்னோர்களுக்கு விழா எடுத்தனர் தமிழர்.
இதேக் காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் முன்னோர்களுக்கு விழா உண்டு (ஆவிகள் தினம், கல்லறை தினம் போன்றவை).
நமது பண்பாட்டில், ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.
உண்மையில், புரட்டாசி அமாவாசை என்பது தவறு. ஐப்பசி அமாவாசை என்பதே சரி.
வடநாட்டினருக்கு ஐப்பசி இருக்கும்போது, நமக்கு இங்கு புரட்டாசி இருக்கும்.
அதனால், வடநாட்டினரின் ஐப்பசியை ஒத்து, புரட்டாசியிலேயே மாலயம் கொண்டாப்படுகிறது.
ஆடி அமாவாசை = முன்னோர்கள் நம்மை காண முன்னோர் உலகத்தில் இருந்து புறப்படுதல்.
ஐப்பசி அமாவாசை = முன்னோர்களுக்கு விழா எடுத்தல், படையல் போடுதல்.
கார்த்திகை முழுநிலவு = மீண்டும் ஒளிவிளக்கில் முன்னோர் உலகத்திற்கு புறப்படுதல்.
தை அமாவாசை = மீண்டும் முன்னோர் உலகம் / இறைவனிடம் சென்று சேருதல்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.