06/08/2018

சேக் உசேன் - மருதுபாண்டித் தளபதி...


ஏதோ தமிழ்-இசுலாமியர் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுப்பதை வரலாற்றில் நடக்காத அதிசயம் போல விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள்.

தமிழன், அவன் எம்மதத்தான் ஆனாலும் தமிழனாகத் தான் தன்னை நினைக்கிறான்.

மருதுபாண்டியர் ஆங்கிலேயப் படையை எதிர்த்து போரிட்டபோது அவர்களது வலதுகரமாக விளங்கியவர் ஒரு இசுலாமியர்.

அவர்தான் 'இச்சப்பட்டி சேக் உசேன்'.

மருதுபாண்டியரைத் தோற்கடித்த கர்னல் வெல்ஸ் தனது 'இராணுவ நினைவுகள்' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மருதுபாண்டியரையும் அவரது குடும்பத்தாரையும் தூக்கிலிட்டு கொன்றபிறகு

சேக் உசேனை உடல்முழுவதும் சங்கிலியால் கட்டி இரும்புக் குண்டுகளுடன் பிணைத்து
மருதுபாண்டியர் படையைச் சேர்ந்த 72பேரை கப்பலில் ஏற்றி நாடு கடத்தினார்கள்.

மலேசியாவின் பினாங்கு தீவில் கொண்டு சிறை வைத்தார்கள்.

சேக் உசேன் இறுதிவரை அடங்கிப் போகாமல் முரண்டு பிடித்தார்.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட இரும்பு குண்டுகளுடன் நகர முடியாமல் கிடந்த போதும் அவர் இறுமாப்புடன் இருந்தார்.

இறுதியில் பட்டினி போட்டு கொல்லப்பட்டார்.

மறக்கக்கூடாது தமிழர்களே
மறக்கக்கூடாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.