திருப்பூர் மாநகர காவல்துறை
4. வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்களின் கவனத்திற்கு,
தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் புதூர் சிக்னலில் 18.02.2018 இரவு 10.30 மணி அளவில் வாகன சோதனை..
தங்கள் கையொப்பம் இட்ட ஸ்பாட் பைன் கேஷ் ரசீது மூலம் சட்ட விரோதமாக காவல் உதவி ஆய்வாளர்
அபராதம் வசூலித்து வருவதாக புகார் வரப்பெற்றுள்ளது.
தலைக்கவசம் அணியாமல் வந்த பால முரளி என்ற இளைஞரிடம் ₹100 ரூபாய் மற்றும் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாததினால் ₹500. சேர்த்து ₹600 ரூபாய் அபராதம் தங்கள் பெயரில் வசூலித்து இருக்கிறார்கள்.
தங்களிடம் இருக்க வேண்டிய. அபராத ரசீது உதவி ஆய்வாளரிடம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
தங்கள் கையொப்பம் இட்டு அபராதம் வசூலிக்க காவல் உதவி ஆய்வாளருக்கு அதிகாரம் வழங்கி உள்ளீர்களா?
அல்லது தங்களுக்கு தெரியாமல் நடை பெறுகிறதா?
என ஐயப்பாடு எழுகிறது.
அறிவிப்பு நோட்டீசில் காவல் உதவி ஆய்வாளரின் கையொப்பம் இடப்பட்டுள்ளது.
உடனடி அபராதம் ₹600 செலுத்தி ரசீது பெற்று சிறிது நேரத்தில் திரும்பி அதே பகுதியில் அந்த இளைஞர் செல்லும் போது மீண்டும் வாகன சாவியை புடுங்கி எடுத்து வைத்துள்ளனர்.
அபராதம் இப்ப தான் சார் செலுத்தினேன் என அந்த இளைஞர் கூறி உள்ளார்.
வாகன சாவியை கொடுங்கள் என கூறி உள்ளார்.
உதவி ஆய்வாளரை எதிர்த்து பேசுகிறாயா?
கேஷ் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டி உள்ளார்.
காவல் ஆய்வாளர் கையொப்பம் இட்ட ரசீது மூலம் சட்ட விரோதமாக உடனடி அபராத தொகை வசூலித்ததுடன்,
வாகன சாவியை எடுத்து வைத்து கொண்டும் கேஷ் போட்டு ரிமாண்ட் பண்ணி ஜெயிலில் அடைத்து விடுவேன்.
அப்புறம் வக்கீல் வைத்து தான் வெளியில் வர வேண்டும் ஜாக்கிரதை! என சட்டம் ஒழுங்கை பேணி காக்கும் உதவி ஆய்வாளர் பொது இடத்தில் வாகன ஓட்டியை மிரட்டுவது ஏற்புடையது தானா?
இத்துடன் அறிவிப்பு நோட்டீஸ் நகல், ஸ்பாட் பைன் கேஷ் ரசீது நகல் மற்றும் உதவி ஆய்வாளர் மைக்கேல் என்பவர் பேசிய காணொலி தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.
உதவி ஆய்வாளர்கள் உடனடி அபராதம் வசூலித்து வருவதாக பல புகார்கள் வரப்பெற்றுள்ளது.
நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.
குறிப்பு : அறிவிப்பு நோட்டீஸ் எண் ஸ்பாட் பைன் ரசீதில் தவறாக குறிப்பிடப் பட்டுள்ளது. இது போலி ரசீது என்பது இதன் மூலம் உறுதி படுத்தப்பட்டுள்ளது.
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
உலாபேசி :98655 90723
திருப்பூர். 18.02.2018...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.