22/02/2018

பிளாக் பேந்தர் விமர்சனம்...


முதல் முழு நீள கறுப்பின சூப்பர் ஹீரோ படம் எனும் முத்திரையுடன் வந்திருக்கிறது பிளாக் பேந்தர் படம்.

(அப்போ wesley snipes நடித்து blade சீரிஸ் படங்கள் என்னவாம் ? என்ற கேள்வியை யாரும் கேட்க வில்லையா அவர்களிடம்).

வைப்ரேனியம் சூட்.. ஹை டெக்னாலஜி .. சூப்பர் பவர்.. விரைந்து குணமாகும் சக்தி எனும் கலவை உடன் நமக்கு ஒரு புதிய சூப்பர் ஹீரோ ரெடி..

ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டில் உலகத்தின் கண்ணில் தெரியாமல் மறைந்து இருக்கும் ஹைடெக் நாடு வகாண்டா.. அங்குள்ள உயர் தொழில் நுட்பம்.. பாதுகாப்பு.. விஞ்ஞானம் யாவற்றிற்கும் காரணம் அங்குள்ள உலகின் மிக விலையுயர்ந்த பொருளாகிய வைப்ரேனியம் சுரங்கம்.
(அது நீண்ட நாள் முன்பு விண்வெளியில் இருந்து வந்தது ).

தனது தந்தையின் சாவிற்கு பின் வகாண்டாவின் புதிய மன்னனாக பதவி ஏற்கிறார் டிச்சாலா. அவனுக்கு எதிரியாக வந்து வாய்கிறார் killmonger. யார் இந்த கில்மோன்கர் ?

பழைய மன்னன் டிச்சாச்சா வின் சகோதரனின் மகன் அதாவது நம்ம ஹீரோவுக்கு அண்ணன்.

டிச்சாளா வால் கொல்ல பட்ட தனது தந்தையின் மரணத்தால் வெறுப்பில் இருக்கும் killmonger  மண்னனை சவாலுக்கு அழைக்கிறார்.

வகாண்டா விதிமுறை படி யார் வேணா மன்னனை போட்டிக்கு சவாலுக்கு அழைக்கலாம் வென்றவர் தான் மன்னன். அந்த முறை படி நடக்கும் சண்டையில் டிச்சாளா வை வீழ்த்தி அருவியில் தூக்கி போடுகிறார் killmonger. இனி நான் தான் மன்னன் என்று முடி சூட்டி கொள்கிறார்.

ஆனால் அவர் நினைத்தது போல டிச்சாளா சாக வில்லை. தப்பி உயிர் பிழைத்து தனது வகாண்டா நாட்டை மீண்டும் அவனிடமிருந்து மீட்பது தான் கதை.

படத்தில் ஸ்பெஷல் எபெக்டும் சண்டை காட்சிகளும் ஏலியனுக்கு நிகரான தொழில் நுட்பமும்.. படத்தின் பிளஸ்..
கண்ணை கவரும் வகாண்டா நாடு படம் முடிந்து வந்த பிறகும் கண்ணை விட்டு அகல மறுக்கிறது.

படத்தின் பிரமாண்டம் ரசிக்க வைக்கிறது (3d யில் இன்னும் சிறப்பாக ).

பொதுவாக ஆங்கில படத்தில் இருக்கும் குறைந்த பட்ச சஸ்பென்ஸ் அல்லது ட்விஸ்ட் கூட இதில் இல்லை என்பது ஒரு வகை மைனஸ் என்று சொல்லலாம்.

டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் கதை பாணி போல ஆரம்பித்த உடனே இதான் கதை என்று யூகித்து தெரிந்து கொள்ள முடிகிறது.

வாகண்டாவில் காட்ட படும் தொழில் நுட்பம் சாத்தியப்பட வேண்டும் என்றால் அங்கு குறைந்தது 500 விஞ்ஞானிகளாவது இருக்க வேண்டும் ஆனால் அங்கே இருப்பது ஒரே ஒரு விஞ்ஞானி ஹீரோவின் தங்கை தான்.

அப்புறம் மன்னன் என்றால் காமெடி பண்ண கூடாது சிரிக்க கூடாதுனு எல்லாம் ரூல் வைக்காதீங்கப்பா நம்ம thor ஐ பார்த்து திருந்துங்க..

மொத்தமாக பார்க்கும் போது படம் ஏற்படுத்தி இருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவற வில்லை. அதனால்
கருஞ்சிறுத்தை கண்டிப்பாக ஒரு ரவுண்ட் வலம் வருவார்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.