15/03/2018

மாயமாக மறைந்த ஒரு கிராமம் - விடையின்றி தொடரும் மர்மம்...


ஒரு மர்ம கிராமம் பற்றி இன்று பார்க்கப்போகின்றோம்..

இது சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் ஏதோ ஒரு பத்திரிகையில் கென்னியா வைச்சேர்ந்த கிராமம் என்ற தகவலுடன் வாசித்த நினைவு. இப்போது தேடிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

அஞ்ஜிகுனி, கனடாவில் ஒதுக்குப்புறமாக மலையைச்சார்ந்து அமைந்திருந்த கிராமம். சுமார் 2000 மக்கள் சாதாரணமாக வாழ்ந்து வந்தார்கள். ஏரியில் மீன் பிடித்து விற்பதை முக்கிய தொழிலாக கொண்டிருந்தார்கள் அவர்கள்.

1930 ஆம் ஆண்டு கார்த்திகை ( நவம்பர்) மாதம் ஒரு நாள்…

பொறி வைத்து விலங்குகளை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட ஜோ லபல் என்பவர் அந்த ஊருக்கு சென்றார். அது முதல் தடவையல்ல… பல தடவைகள் அவர் அந்த ஊருக்கு சென்றுள்ளார்.

ஆனால் அன்று சற்று வித்தியாசமாக இருந்தது ஊர். ஊருக்குள் கால் வைத்தது முதல் யாரையும் அவர் காணவில்லை. ஊரின் மையப்பகுதிக்கு சென்றும் அவர் கண்களில் யாரும் அகப்படவில்லை. வீட்டுக்கதவுகள் திறந்து கிடந்தன. வீட்டிற்குள் சென்று பார்த்தால் சமைத்த உணவுகள் அப்படியே கிடந்தன. பாதி தைத்த உடைகளில் ஊசி கூட வெளியில் எடுக்கப்படாமல் இருந்தது.
இறுதியாக இரு வாரங்களுக்கு முதல் கூட அங்கே வந்திருந்தார் ஜோ. கிராமத்தவர்கள் அனைவருமே கலகலப்பானவர்கள். சுமூகமான சமூகம்.

ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்த ஜோ, பகுதி காவலர்களுக்கு அறிவித்தார். அவர்கள் தேடியும் அந்த கிராமத்திற்கு என்ன நடந்தது? அங்கிருந்தவர்கள் எங்கே? போன்ற கேள்விகள் தேங்கித்தான் நின்றன.

சுற்று முற்றும் தேடி விசாரித்ததில்…

ஊரின் மறு முனையில் வண்டில்களை இழுத்து செல்லும் நாய்கள் இறந்து கிடந்தன. ( 7 நாய்கள் என்று சில தகவல்களும் சிலது 3 எனவும் மாறுபட்டு இணையத்தில் உள்ளது.) அந்த நாய்கள் எவ்வாறு இறந்தன என்பதை அப்போது பெரிதாக யாரும் சோதனையிடவில்லை.

அருகில் உள்ள ஊரைச்சேர்ந்த பலர் அந்த ஊரின் மலைப்பகுதியில் வெளிச்சத்தத்தை பார்த்ததாக கூறினார்கள்.

கூறப்படும் காரணங்கள்...

வேறு இடம் பெயர்ந்திருப்பார்கள் : சகல வசதிகளும் இருக்கும் அந்த மக்கள் பொருட்களை அப்படி அப்படியே விட்டு விட்டு கிளம்பிப்போக வாய்ப்பில்லை. அப்படி போய் இருந்தாலும் எங்கே?

படையெடுப்பு : ஏதோ ஒரு ஊரைச்சேர்ந்தவர்கள் படையெடுத்து சிறைப்பிடித்திருப்பார்கள். ஊரில் படையெடுப்பு நடந்தமைக்கான எந்த அறிகுறிகளும் இருந்ததில்லை. படையெடுப்பு அமைதியாக நடைபெற வாய்ப்பும் இல்லை.

வெம்பயர், காட்டேர்களின் தாக்குதல் குறிப்பிட்ட காலத்தில் வெம்பயர்கள் தொடர்பான அதீத நம்பிக்களைகள் இருந்தமையால் இந்த கருத்து வெளியிடப்பட்டிருக்கலாம். மனித இறப்புக்களுக்கான சான்றுகளோ இரத்த அடையாளங்களோ கிராமத்தில் கண்டு பிடிக்கப்படவில்லை.

ஏலியன்ஸ் : பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் மலையில் வெளிச்சத்தை பார்த்ததாக கூறியதன் படி, ஏலியன்ஸ் ஒரே தடவையில் அந்த ஊர் மக்களை/ உயிரினங்களை மட்டும் கடத்தி இருக்க கூடும்.

பரிமாணம் : அந்த ஊர் மக்கள் பரிமாண மாற்றத்தில் மறைந்திருக்கலாம். இதுவும் சற்று குழப்பமானது. விரிவாக பின்னர் பார்க்கலாம்.

எமது கருத்துப்படி, மறை உலகம்.. கிட்டத்தட்ட இது பரிமாணத்தை ஒத்துப்போகும். ஏற்கனவே இது தொடர்பாக பார்த்துள்ளோம். மீண்டும் இன்னோர் சந்தர்ப்பத்தில் விரிவாக பார்க்கலாம்.

இவ்வாறு பல கருத்துக்கள் கூறப்பட்டாலும், இந்த கிராம மக்கள் காணாமல் போய் 83 வருடங்களைத் தாண்டியும் இன்னமும் இதற்கான விடையை கனேடிய போலிஸாரும் ஆய்வாளர்களும் கண்டறிய முடியாதுள்ளனர்..

இவ்வாறான மேலும் பல மர்மங்களை அறியலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.