வானம் பொழிகிறது! பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி..
இந்த வசனத்தை உண்மையில் பேசியது மதுரை கள்ளர்கள்.
இது ஆங்கிலேயர் ஆவணத்தில் பதிவாகி உள்ளது.
இந்த வசனத்தை காப்பி அடித்து சம்மந்தம் இல்லாமல் கட்டபொம்மு பேசியதாக கதை அமைத்து அதையும் ஒரு கள்ளர் (சிவாஜி கணேசன்) வாயாலேயே பேச வைத்துவிட்டார் இயக்குனர் தெலுங்கு பந்துலு.
Source :The Madura Country: A Manual.
1750களில் பிரிட்டிஸார் மதுரை மண்டலத்தில் வரி வசூல் செய்யும்உ ரிமையை பெற்று தன்னரசு கள்ளர்நா ட்டிற்கு வந்த பொழுது பிரிட்டீஸார்க ள்ளர் நாட்டாரிடம் வரி கேட்ட போது அவர்கள் அளித்த பதில் என்னவென்று பிரிட்டிஸாரே புத்தகம் எழுதியுள்ளனர்.
ராபர்ட் ஓர்ம், s.c ஹீல், எட்கர் தர்ட்சன்எ ழுதிய நூல்களில் பிரிட்டீஸ் அரசு தன்னரசு கள்ளர்களிடம் வரியை கேட்டது அதற்கு அவர்கள் அவமானம் அளிக்கும் வார்த்தைகளால் பதிலை அளித்தார்கள் என்று கூறுகிறார்கள்.
கள்ளர்களின் பதில்...
வானம் பூமிக்கு மழையைத் தருகிறது,
எங்கள் வயலை நாங்கள் உழுது பயிரிட்டு உழைக்கிறோம்.
அதனால் கிடைக்கும் பிரதிபலனை எங்கள் மக்கள் அனுபவிக்கிறார்கள்.
இதில் என்ன காரணம் உள்ளது நாங்கள் உங்களுக்கு கீழ்பணிந்து வரி செலுத்துவதற்கு?
மேலும் அந்த புத்தகத்தில் அவர்கள் அந்த பதிலுக்கு ஏற்றார்போல் எங்களிடம் சண்டையிட்டார்கள் என்றும் கூறுகின்றனர்.
சான்றுகள்...
The rebel commandant by S.C Hill
East india magazine by R.Alexander
Castes and Tribes of south India by Edger thurston
நன்றி: சோழ பாண்டியன் - ஏழுகோட்டை நாடு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.