13/10/2018

இந்திய இளைஞர்கள் காவு கொடுக்கப்பட்டு கொண்டுள்ளார்கள்.?


சமீபத்தில் பிரிக்ஸ் மாநாடு என்று ஊடகங்கள் வாயிலாக நாம்  தெரிந்து கொண்டோம் அல்லவா ?

அந்த மாநாட்டில் முக்கியமாக பங்குபெற்ற நாடுகள் இந்தியா, சைனா, பிரேசில், சவுத் ஆப்பிரிக்கா..

இங்கு கூறப்பட்டுள்ள ஒரு தகவல் தான்...

இந்தியா அதிக இளைஞர்களை கொண்ட நாடு என்றும் படித்த மாணவர்கள் உள்ளனர் என்றும் பெருமிதமாக பேசியது..

மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் இளைஞர் படை அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது..

கிட்டத்தட்ட  25 % இளைஞர்கள் இந்தியாவில் உள்ளவராகவும் தெரிவிக்கப்பட்டது..

இந்தியாவில் கிட்டத்தட்ட 30 கோடி இளைஞர்கள் உள்ளனர் என்றும் கூறப்பட்டது..

பலத்த கைத்தட்டலுடன் இந்தியன்டா என்று பெருமை பீற்றிக்கொண்டது இந்திய ஊடகமும்..

இது அப்படியே இருக்கட்டும்....

மருத்துவ நோய் கண்டறியும் காரணி துறையில் ஒன்றுதான் எப்பிடமாலஜி என்ற துறை..

இவங்க இந்தியாவுக்கு ஒரு ஆய்வறிக்கையை சமர்பிக்கிறார்கள்.

அது தான் தொற்றாத வாழ்வியல் நோய் [non communicable diseases]..

நீரழிவு நோய், இரத்த கொதிப்பு, மாரடைப்பு, புற்றுநோய், நுரையீரல் நோய், மற்றும் உளவியல் நோய், இவை தான் இதில் அடங்கும்..

இதை கட்டுப்படுத்த நடவடிக்கை உடனே இந்தியா எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது..

செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று தான்..

இதில் அடுத்த வார்த்தை தான் மிகவும் முக்கியம்..

இது 25 வயது முதல் 40 வயது இளைஞர்களுக்கு தான் வேகமாக பரவுகிறது என்றும் கூறுகின்றது அந்த ஆய்வு..

அதெல்லாம் இல்லைங்க பரம்பரை நோய் அது..

அப்பாவுக்கு இருந்தால்  பிள்ளைக்கும் சக்கரை நோய் இருப்பது சகஜம் தானே என்று சிலர் ஆசுவாசப்படுத்தி கொண்டு இருக்கும் நிலையில் தான்..

ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகம் ஒரு ஆய்வை கடந்த ஆண்டு வெளியிட்டது..

அதில் கூறியுள்ள வாசகங்கள் என்ன தெரியுமா ?

காலையில் 8 மணிக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் கூலி தொழிலாளியின் மகனுக்கு கூட சக்கரை நோய் வருகிறது..

பாரம்பரிய நோய் என்பதை தாண்டி கடந்த 4 வருடத்தில் சக்கரை நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.. முக்கியமாக இதில் கிட்டத்தட்ட 75 % பேருக்கு பரம்பரையில் சக்கரை நோய் இல்லை
எல்லோருக்குமே புதிதாக சக்கரை நோய் வந்துள்ளது என்பது தான் அந்த ஆய்வு ...

என்ன நடக்கிறது ?

நாம் சிறு வயதாக இருந்த காலத்தில் தேன் மிட்டாய் கடலை மிட்டாய் ஜவ்வு மிட்டாய்.. ஏன் வாழையிலையில் கூட முதலில் இனிப்பை தானே
வைப்பார்கள்..

எல்லாவற்றையும் தானே உண்டு வந்தோம்..

இப்பொழுது குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுக்கவே பயப்படுகிறோம் ஏன் ?

நீரழிவு நோய்க்கு இந்தியா தான் தலைமை பீடம் என்ற கட்டுரையை கடந்த ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது படித்தால் மயக்கம் வராத குறை தான்..

நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்..

https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/India-is-the-diabetes-capital-of-the-world/articleshow/50753461.cms

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3920109/

இப்பொழுது முதல் பகுதியில் கூறிய விடயமும் இறுதியான விடயமும் ஒத்து போகிறதா ?

ஏன் இளைஞர்கள் காவு கொடுக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ?

இன்றைய அரசியல் வாதிகளுக்கு தான் வெளிச்சம்...

சாட்டையை சுழற்றுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.