காந்தம் பொதுவாக சிறுவர்களின் கையில் விளையாட்டுப் பொருளாய் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். கைப்பைகளிலும், சிறு பொருள்களை எங்காவது ஒட்ட வைப்பதற்கும், திசை காட்டியாகவும் பயன்படுத்துகிறோம்.
தற்போது காந்தத்தைப் பயன்படுத்தி புற்றுநோய் கலங்களை அழிக்கலாம் என்று ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தென்கொரியாவின் யான்செய் பல்கலைகழக விஞ்ஞானிகள் இந்த புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.
காந்தம், இரும்புத் துகளைப் பயன்படுத்தி புற்றுநோய் கலங்களை தானாகவே அழிந்துவிடத் தூண்டமுடியும் எனக் கண்டுபிடித்துள்ளனர்.
ஒவ்வொரு கலத்தின் வெளிப்புறத்திலும் வாங்கிகள் (Receptors) உள்ளன. இதில் மரண வாங்கி (Death Receptor)4 கலம் (Cell)இறப்பைத் தூண்டுகிறது.
காந்தம், இரும்புத் துகள்களைப் பயன்படுத்தி மரண வாங்கி 4களைத் தூண்டுவதன் மூலம் புற்று நோய் கலங்களை அழிக்க முடியும் என்பதை ஆய்வகத்தில் நிரூபித்துள்ளனர்.
அதே சமயம் புற்று நோய் கலம் அல்லாத கலங்களிலும் இதே வாங்கிகள் இருப்பதால் அவற்றை அழித்து விடாமல் புற்று நோய் கலங்களை மட்டும் அழிக்க முடியுமானால் புற்று நோய் சிகிச்சையில் காந்த சிகிச்சை (Magnetic Therapy) மிகப்பெரும் முன்னேற்றத்தைத் தரும் என நம்புகின்றனர்.
ஆண்டிற்கு 7 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இறப்பதற்குக் காரணமாக இருக்கும் கொடிய நோய்க்கு இந்த புதிய மருத்துவ முறை முடிவு கட்டும் என நாமும் நம்புவோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.