06/03/2019

உலக முடிவும் 13 ஆம் இராசியும் – நாஸ்ட்ரடாமஸ்...


நாஸ்ட்ரடாமஸ்… தனது அனைத்து கணிப்புகளையும் வான சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்தே கணித்தார்.

வழமையாக வான சாஸ்திர நூல்களோ… வான சாஸிதிரிகளோ.. 12 ராசிகளைக் கொண்டே கணித்தார்கள்.

ஆனால் நாஸ்ட்ரடாமஸ் இவற்றிலிருந்து விதி விலக்காக 13 ராசி வட்டத்தையும் உருவாக்கி அதைக்கொண்டே தனது கணிப்புக்களை கணித்திருந்தார்.

அந்த 13 ஆவது ராசியில் இருக்கும் ஒரு நட்சத்திரமே ஃப்பீக்கஸ் நட்சத்திரமாகும்.

அது இதுவரை வானில் தோன்றியதில்லை. அது வானில் முதல் முதலாக தோன்றும் போது பூமியில் மிகப்பெரிய மாறுதல்கள் நிகழும் என அவர் எதிர்வு கூறியுள்ளார்.

இவ் நட்சத்திரம் 2012 ஆம் ஆண்டு தோன்றும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் தோன்றவில்லை.

நட்சத்திரம் புதிதாக வாணில் தோன்றும் போது பூமியில் பாரிய மாற்றங்கள் நடைபெறும் எனும் அவரது கூற்று உண்மையாகவே இருக்கும்..

காரணம்… நமது கண்ணிற்கு புலப்படும் அனைத்து நட்சத்திரங்களின் ஈர்ப்பு பாதிப்பும் நமது சூரிய குடும்பத்திற்கு உண்டு. ஆகவே புதிதாக ஒரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்..

இங்கு இன்னொரு விடையம்… கி.மு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாயன்களின் இராஜ்ஜிய படிவுகளிலும் இந்த புதிய நட்சத்திரம் பற்றி கூறப்பட்டுள்ளதாம்.

எகிப்திய பிரமிட் சுவர்களிலும் வான வெளியை கீறி ஏதேதோ குறிப்பிட்டுள்ளார்கள்… அவை என்ன என சரியாக இனங்கானப்படவில்லை.

அடுத்து… நாஸ்ட்ராடாமஸின் கூற்றுக்களின் படி 7 உலக யுத்தங்கள் நடைபெறும்.

ஏற்கனவே 2 முடிவுற்று விட்டது… இனி வரப்போவது 3 ஆவது… அது 2012 -19 ( சிலர் 2032 இக்குள் என்கிறார்கள்.) ல் வரும் என்று ஒரு ஊகமும் இருக்கிறது.

ஆனால், அத்தோடு உலகம் அழிந்து விடும் என்று சொல்ல முடியாது.
அப்படி இருக்குமானால், அவரின் குறிப்புக்களில் 7 உலக யுத்தங்களைப் பற்றியும் தெளிவாக கூறியிருக்கத் தேவை இல்லை.

3750 ம் ஆண்டலவிலேயே இந்த 7 ம் உலக யுத்தம் நடை பெறுமாம். அதற்குப்பிறகு பூமி மனிதன் வாழத் தகுதியற்றதாகி விடும் என குறிப்பிட்டுள்ளாராம்.

மொத்தத்தில் உலக அழிவு பற்றி நாஸ்ட்ரடாமஸ் என்ன சொல்லி இருக்கார் என்று பார்ப்போம்…

40 ( அல்லது 400 குறிப்பு சரியாக இனங்காணப்படவில்லை.) வருடங்களுக்கு பூமியில் ஒரு சொட்டு மழை கூட பெய்யாது… பனிப்பொழிவு நின்றுவிடும்… உலகம் எங்கும் கடுமையான வெப்பம் நிலவும்… அதனால், மரங்கள் தாவரங்கள் என்பன முற்றாக அழிந்து போகும்… மனித இனமும் இக்காலப் பகுதியில் முற்றாக அழிந்துவுடும்.

அதற்குப்பிறகு… 40 ( / 400)வருடங்கள் தொடர்ச்சியாக மழை பெய்யும்.. ஆனால், அதை அனுபவிப்பதற்கு பூமியில் ஒரு உயிரினமும் இருக்காது…

40 (/ 400) வருட கால மழையைத் தொடர்ந்து பூமி குளிர்ச்சியடைந்து மீண்டும் தாவரங்கள் உருவாகி… உயிரினம் தோன்றும்…

உலகம் புதுப்பிக்கப்படும்…

இந்தக்கூற்று கிறிஸ்தவ மதத்திலிள்ள நோவாவின் கதையோடு ஒத்துப்போக கூடியது… அது பற்றி இங்கு பெரிதாக எழுத வில்லை….

ஆனால், லெமூரியா பதிவில்… நோவாவின் கதைக்கும்…. இந்துக்களின் வேத நூல்களில் கூறப்பட்டுள்ள கதைக்கும் இருக்கும் ஒற்றுமையை நிகழ்கால வரலாற்றுடனும்… லெமூரிய வரலாற்றுடனும் ஒப்பிட்டு பார்த்துள்ளோம்….

இயன்றவரையில் வேறு மதங்களில் இது போன்ற ஒற்றுமைகளை கண்டறிந்து எழுத முற்சிக்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.