13/10/2017

இராவணனைப் புகழும் பார்ப்பனர்..


பல சாதியாருக்கு பூணூல் போட்டு பார்ப்பனராக்கிய பாரதியர் என்ற தமிழ்ப் பார்ப்பனர், இன்றைய பிராமணர்களைப் போல (வடயிந்தியச் சத்திரியனான) ராமனைப் போற்றவில்லை (தமிழ்ப் பார்ப்பனன்) இராவணனைத் தான் புகழ்ந்துள்ளார்...

அவர் 1935ல் எழுதிய 'குதிரைக் கொம்பு' கதையிலிருந்து சில வரிகள்..

அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவளாகிய பரதனுக்கு பட்டங் கட்டாமல் தனக்கே பட்டங்கட்டிக் கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான்..

பிதாவுக்கு கோபமுண்டாய், ராமனையும் லக்ஷ்மணனையும் ராஜ்யத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான்..

அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிபோய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணமடைந்தார்கள்..

ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகை கண்டு மோகித்து, அவளை திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டைகாரண்யம் புகுந்தான்.

அங்கு ராமர், லக்ஷ்மணர் முனிவர்களையெல்லாம் பலவிதங்களிலே ஹிம்சை செய்தனர்..

சூர்ப்பநகை தேவியின் காதில் பட்டது. ராவணனின் தங்கையாகையாலும், பிராமணக் குலமானபடியினாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்க மாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லக்ஷ்மணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டு வரும்படி தனது படையினிடம் உத்தரவு கொடுத்தாள்..

அப்படியே ராமலக்ஷ்மணரைப் பிடித்துத் தாம்பினாலே கட்டிச் சூர்ப்பநகையின் சன்னிதியிலே கொண்டு சேர்த்தனர்..

சீதை சூர்ப்பநகையிடம் தனியாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில், ராமன் தன்னை வலிமையாலே தூக்கிக் கொண்டு வந்தானென்றும், தனக்கு மறுபடியும் மிதிலைக்குப் போய்த் தனது பிதாவுடன் இருக்கப் பிரியம் என்றும் சொன்னாள்..

ராமன் சூர்ப்பநகையிடம் சீதை எங்கே? என்று கேட்டான்..

அவளை இலங்கைக்கு அண்ணன் ராவணனிடத்தில் அனுப்பியிருக்கிறேன்.

அவள் அவளை மிதிலைக்கு அனுப்பினாலும் அனுப்பக்கூடும்.

எது வேண்டுமானாலும் செய்யக் கூடும். மூன்றுலகத்திற்கும் அவன் அரசன்..

சீதையை ராவணனிடமிருந்து மீட்க வேண்டுமென்று நினைத்துக் கிஷ்கிந்தா நகரத்திற்கு வந்து சேர்ந்தான்..

வாலிக்கும் ராவணனுக்கும் மிகுந்த சினேகம். இரண்டு பேருமே ஒரே வகுப்பில் கணக்கு வாசித்தார்கள்..

வாலி தூங்கிக் கொண்டிருக்கையில் தம்பி சுக்கிரீவன் இவன் கழுத்தை மண்வெட்டியால் வெட்டியெறிந்துவிட்டு அவன் மனைவியாகிய தாரையை வலிமையால் மணந்து கொண்டு அனுமான் என்ற மந்திரியின் தந்திரத்தால் ராஜ்யத்தை வசப்படுத்திக் கொண்டான்..

கிஷ்கிந்தையின் சுக்கிரீவனுக்கு இலங்கேசனாகிய ராவணன் எழுதிக் கொண்டது...

நமது சிநேகிதனைக் கொன்றாய்.
உனது அண்ணனைக் கொன்றாய்.
அரசைத் திருடினாய்.

இந்த ஓலையைக் கண்டவுடன் தாரையை இலங்கையிலுள்ள கன்யா ஸ்திரீ மடத்துக்கு அனுப்ப வேண்டும்..

ராஜ்யத்தை வாலி மகன் அங்கதனிடம் கொடுக்க வேண்டும்.

நீ ஸந்நியாஸம் பெற்றுக் கொண்டு ராஜ்யத்தை விட்டு வெளியேறி விடவேண்டும்.

இந்த உத்தரவுக்கு கீழப்படாத விஷயத்தில் உன்மீது படையெடுத்து வருவோம்..

சுக்கிரீவன் மேல் படையெடுத்துச் செல்லும்படி சேனாதிபதியிடம் ஆக்கினை செய்தான்..

அனுமான் தன்னுடைய ஜாதி ஒரு விதமான லேசான குரங்கு ஜாதியாகையால் விரைவாகக் குரங்கு படைகளைத் திரட்டிக் கொண்டு இலங்கையை நோக்கிப் புறப்பட்டான்..

இவனுடைய சேனையிலே ராம லக்ஷ்மணரும் போய்ச் சேர்ந்தனர்..

ராவணன் சேனையிலிருந்து ஒரு பகுதி இவர்களை எதித்துக் கொன்று முடித்துவிட்டன..

ராம லக்ஷ்மணர் மாத்திரம் சில சேனைப் பகுதிகளை வைத்துக் கொண்டு ரகசியமாக இலங்கைக்குள்ளே வந்து நுழைந்து விட்டார்கள்..

இந்தச் செய்தி ராவணன் செவியிலே பட்டது..

உடனே ராவணன் "ஹா, ஹா, ஹா, நமது நகரத்திற்குள் மனிதர் சேனையை கொண்டு வருவதா! இதென்ன வேடிக்கை! ஹா, ஹா, ஹா!" எனறு பேரிரைச்சல் போட்டான்..

அந்த ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாய் விட்டான்..

சூரிய மண்டலம் தரைமேலே விழுந்தது..

பிறகு ராவணன் ராமனுடைய சேனைகளை அழித்து, அவனையும் தம்பியையும் பிடித்துக் கொண்டு வரும்படி செய்து, இராஜகுமாரர் என்ற இரக்கத்தினால் கொல்லாமல் விட்டு, அவ்விருவரையும் தனது வேலையாட்களிடம் ஒப்புவித்து ஜனகன் வசம் சேர்க்கும்படி அனுப்பினான்..

பிறகு சீதையும் மிதிலைக்குப் போய்ச் சேர்ந்தாள்..

மறுபடி, ஜனகன் கிருபை கொண்டு அந்த ராமனுக்கே சீதையை விவாகம் செய்து கொடுத்து விட்டான்..

அப்பால் ராம லக்ஷ்மணர் அயோதிக்குப் போய்ப் பரதனுக்குப் பணிந்து நடந்தார்கள்...

இது தான் நிஜமான ராமாயணக் கதை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.