03/01/2019

மேரி மக்தலின் யார்.?


"ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு"
- தீத்து 3:2 (புனித பைபிள்)

#மரியாள்_சுவிசேஷம்:
(கி.பி 120-180)

மரியாளின் சுவிசேசத்தில் மக்தலின் மரியாள் பல இடங்களில் காணப்படுக்கிறார். இந்நூலின் ஓர் இடத்தில் சீடர்களுக்குள் நடைபெறும் உரையாடலை வாசிக்கலாம்.

பேதுரு மரியாளை நோக்கி,
"சகோதரியே, இரட்சகர் மற்ற பெண்களை காட்டிலும் உங்களை அதிகம் நேசித்தார் என்று எனக்கு தெரியும். எங்களிடம் கூறாத ஏதேனும் போதனைகளை அவர் உங்களுக்கு கூறி இருந்தால் அதனை நாங்களும் அறியும்படி எங்களுக்கும் கூறுங்கள்" என்றார். எனவே மரியாள் ரட்சகரால் தனக்கு வெளிபடுத்தப்பட்டிருந்த போதனைகளை அவர்களிடம் கூறினாள்.

உடனே அந்திரேயா, "இதை இரட்சகர் கூறியிருப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை. இவை விசித்திரமான போதனைகள்" என்றார். அதற்கு பேதுரு, "நம்மிடம் வெளிப்படையாக கூறாமல் அவர் ஒரு பெண்ணிடம் தனிப்பட்டு கூறுவாரா? நாம் அவள் கூறுவதை நம்பவேண்டுமா? அவருக்கு நம்மை விட அவள் உயர்ந்தவளா?" என்றார்.

அப்பொழுது லேவி, "பேதுருவே நீ முன்கோபக்காரன், நீ பெண்களை ஏதோ எதிரிகளை போல சித்தரிக்கிறாய். இரட்சகரே அவளை மகிமைபடுத்தும் போது நீ யார் அதை தடுக்க? நிச்சயமாக இரட்சகர் அவளை நன்றாக அறிந்திருக்கிறார், எனவே தான் அவர் அவளை நம்மிலும் அதிகமாய் நேசிக்கிறார்" என்றார் - மரியாள் சுவிசேசம்

#பிலிப்பு_சுவிசேசம்:
(கி.பி 180 - 250)

"மூவர் ஆண்டவருடன் எப்பொழுதும் நடந்தனர், மரியாள் என்னும் அவரின் தாய், அவரின் சகோதரி மற்றும் அவரின் உறுதுணை என்று அழைக்கப்பட்ட மேரி மக்தலின். அவர் தாய், சகோதரி, உறுதுணையாளர் ஆகிய மூவருமே மரியாக்கள் தான் "

#தோமா_சுவிசேசம்: (கி.பி 50-140)

"தங்களின்  சீடர்கள் யாரை போன்றவர்கள்?" என்று மரியாள் இயேசுவை கேட்டாள். சீமோன் பேதுரு அவர்களிடம், "மரியாள் நம்மை விட்டு விலகட்டும், பெண்கள் ஜீவியத்திற்கு பாத்திரர் அல்ல" என்றான். அதற்கு இயேசு, "ஒரு ஆணை போல நான் அவளை வழிநடத்துவேன், எனவே அவளும் ஆண்களாகிய உங்களை போன்று ஜீவியத்திற்கு பாத்திரமாவாள். தன்னை ஆணாக மாற்றிக்கொள்ளும் எந்த பெண்ணும் நிச்சயமாக பரலோகத்தில் பிரவேசிப்பாள்" என்றார்.

இந்த உரையாடலில் மேரி மக்தலின் ரட்சகரால் சீஷர்களை விட மிகவும் நேசிக்கப்பட்டவர் என்றும், சீஷர்களிடம் கூட கூறப்படாத விசித்திரமான போதனைகளை மேரி மக்தலின் இரட்சகரிடம் கேட்டறிந்தவர். மேரி மக்தலின், இயேசுவின் ஒரு சக்திவாய்ந்த பெண்மணியாக இருந்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.