31/08/2020

பொட்டல்காடு, குலையன்கரிசல் பகுதியில் எரிவாயுக்குழாய் பதிப்பு - போலீசார் குவிப்பு...


தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல், பொட்டல்காடு மக்கள் குடியிருப்பு, அரசு உயர்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம் அருகில் எரிவாயுக்குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து,  மாற்றுப்பாதையை தேர்வு செய்யக்கோரி பொட்டல்காடு கிராம மக்கள் அறவழி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

வாழை, நெல் வயல்களில் எரிவாயுக்குழாய் பதிக்க குலையன்கரிசல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய அரசிடம் பேசி, மாற்றுப்பாதைக்கான ஆய்வு செய்கிறோம் என்று தமிழக அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் வாக்குறுதி கொடுத்திருந்தது.

இந்நிலையில் பொட்டல்காடு, குலையன்கரிசல் கிராமங்களில் அதிரடிப்படை காவலர்கள் திடீரென குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு படையும் வந்துள்ளது. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

தூத்துக்குடி மாவட்டம்  பொட்டல்காடு அருகே IOCL குழாய் பதிப்பு பிரச்சினை குறித்த பேச்சு வார்த்தைக்கு  இன்று மாலை நான்கு மணிக்கு  மாவட்ட ஆட்சியர் மீண்டும் அழைத்துள்ளார். சென்னை எண்ணூர் - நாகப்பட்டினம் - தூத்துக்குடி பாதையில் எரிவாயுக் குழாய் பதிக்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி ஸ்பிக், ஸ்டெர்லைட், தாரங்கதாரா உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளுக்கு சாலை வழியாக லாரிகள் மூலம் எரிவாயு கொண்டு வரும் போது அதிக செலவாகிறது என்பதால், நிலத்தடியில் குழாய்கள் பதித்து எரிவாயு கொண்டு வரப்பட உள்ளது.

முதல்வர் தூத்துக்குடி வருவதால்,
அதற்குள் போராட்டத்தை முடித்து வைக்க நினைக்கின்றனர் என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.