இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட "நன்னூல்" எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்த இடத்தில பிறக்கிறது?
பிறந்த எழுத்தை ஒலிக்க எந்த உறுப்பு துணை புரிக்கிறது ?
துணை புரியும் உறுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை படித்து அதிர்ச்சி அடைந்தேன்..
தமிழ் எழுத்துக்கள் உடலில் மார்பு, கழுத்து, தலை, மூக்கு, ஆகிய நான்கு இடங்களில் பிறக்கிறது.
இதை ஒலிக்க உதடு, நாக்கு, பல், அண்பல் (அதாவது மேற்பல் வரிசையின் அடிப்பகுதி ) அண்ணம் ( வாயின் மேல்பகுதி ) பயன்படுகின்றது, அங்காத்தல் ( வாய் திறத்தல் ) , உறல் ( பொருந்துதல் ), வருடல் ( தடவுதல் ), ஒற்றுதல், குவிதல், என்று செயல்படுகின்றது என விவரிக்கிறது..
அ,ஆ எனும் முதல் இரு எழுதும் கழுத்துப் பகுதியில் காற்று வெளிப்பட்டு - வாய் ஒலிப்பு உறுப்பாகி, வாய் திறத்தல் எனும் செயல்பாட்டில் பிறக்கின்றது..
இ,ஈ,எ,ஏ,ஐ ஆகிய ஐந்து உயிர் எழுத்தும், கழுத்துப் பகுதி காற்று பிறப்பிடமாகி, வாய், அண்பல், அடிநாக்கு ஒலிப்பு உறுப்பாக, திறத்தல்-உறல் (பொருந்துதல்) செயலால் எழுத்தாகி ஒலிக்கிறது...
உ,ஊ,ஒ,ஓ,ஒள ஆகிய ஐந்து உயிர் எழுத்தும் கழுத்தில் காற்று பிறப்பிடமாகி, ஒலிக்க உதடுகள் பயன்பட, குவிதல் செயல் மூலமாக பிறக்கின்றன..
தமிழ் எழுத்துகளுக்கு எத்தனை சிறப்புக்கள் என்று பாருங்கள் ?
உலகில் வேறு ஏதாவது மொழிக்கு இந்த சிறப்பு உண்டா ?
இன்னும் என்ன தயக்கம் தமிழை பெருமையாய் பேச ?
தமிழரின் சாதனைத் தேடல் தொடரும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.