10/04/2018

புதுமையான மரங்கள், விலங்குகள் கொண்ட அதிசய தீவு...


இந்த உலகில் அதிசயங்களும் விநோதங்களும் ஏராளமாக இருக்கின்றன. அதுபோல உலகில் இன்னமும் விடை தெரியாத புதிர் முடிச்சுகளும் இருக்கின்றன. ஏன், எதற்காக, இப்படி என்று விளக்கம் காண இயலாத மர்மங்களும் இருக்கின்றன.

இப்படி சில விநோதங்களும் மர்மங்களும் கொண்ட ஒரு தீவு இருக்கிறது. அந்தத் தீவில் எங்கு பார்த்தாலும் எல்லாமே வித்தியாசமாக இருக்கின்றன. பார்க்கின்றவை எல்லாம் இதுவரை நம் கண்கள் காணாதவையாகவே உள்ளன என்றால் ஆச்சரியம் தானே..

இந்தத் தீவில் காணப்படும் பொருட்கள் எல்லாம் இந்த உலகில் வேறு எங்கும் காணப்படாதவையாக இருக்கின்றன.

இப்படி பல விநோதங்களைக் கொண்ட அந்த தீவின் பெயர் சோகோட்ரா தீவு.

இந்த தீவு யெமென் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டது. யெமென் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபிய மூவலந்தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்து உள்ளது. வடக்கில் சவூதி அரேபியாவும் வடகிழக்கில் ஓமனும் எல்லைகளாக அமைந்துள்ளன. தெற்கேயும் கிழக்கேயும் அரபிக் கடல் அமைந்துள்ளது. வடமேற்கில் செங்கடல் அமைந்துள்ளது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு புதிரான இடம்தான் இந்த தீவு என கணிக்கப்படுகிறது.

இந்தத் தீவு - இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கொம்பு கடற்கரைக்கு அடுத்து அராபிய தீபகற்பத்திற்கு தெற்கே 190 கடல்வழி மைல்கள் (220 மைல்; 350 கி.மீ) தொலைவில் உள்ள நான்கு தீவுகள் அடங்கிய சிறு தீவுக்கூட்டமாகும்.

இந்த தீவு கரடுமுரடான பாலைவனம் போல காணப்படுகிறது. வறண்ட நிலமாக இருக்கிறது. திட்டு திட்டாக காடுகளும், பாறைகளும் காணப்படுகின்றன.

இங்கு காணப்படும் மரங்களும், விலங்குகளும் இதுவரை உலகில் எங்கும் காணப்படாத வித்தியாசமான வடிவத்தோடு காணப்படுகின்றன.

இது போன்ற வடிவம் கொண்ட மரங்கள் மற்றும் விலங்குகளை எங்கும் காண முடியாது. அது தான் அந்த தீவின் மர்மத்தின் நுழைவு வாயிலாக இருக்கின்றது.

இத்தீவுகளில் சிற்றினத்தோற்றம் காரணமாக இங்குள்ள தாவரங்களில் மூன்றில் ஒருபங்கு உலகின் பிற பகுதிகளில் காணப்படுவதில்லை. இவை புவிப்பரப்பில் வெளிக்கிரக சூழல் போன்று விளங்கும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சிற்றினத்தோற்றம் என்பது ஓர் உயிரினம், தன்னுடைய சுற்றுச்சூழலில் வாழும் பொழுது, தன் தேவைக்கேற்ப ஏற்படும் படிமலர்ச்சி நடைமுறையினால் முற்றிலும் ஒரு புதிய உயிரினமாக உருவெடுத்துத் தோன்றுவதாகும்.

ஓர் உயிரினத்திலிருந்து, புதியதொரு சிற்றினம் இயற்கையாக நான்கு முறைகளில் தோற்றமடைகிறது. இந்த தீவில் 900 வகை தாவரங்கள், டிராகன் இரத்த மரம் மற்றும் உலகின் வேறு எங்கும் இல்லை என்று அரிதான பறவைகள் சில இருக்கின்றன.

புதர் குரோட்டன் மற்றும் வினோதமான மரம், சதைப்பற்றுள்ள மரம், உயரமான குங்கிலியம் மரங்கள், மூன்று ஆண்டு முழுவதும் தோன்றும் சோற்று கற்றாழை, மற்றும் காட்டு மாதுளை இருக்கின்றன. அழகிய மணல் கடற்கரைகள், குகைகள், ட்ரெக்கிங், ஒட்டக சவாரி, பறவை பார்த்தல் மற்றும் கடல் நீச்சல், கண்கவர் புதிய நீர் குளங்கள், அற்புதமான பள்ளத்தாக்குகள், அற்புதமான மணற்குன்றுகள் இத்தீவில் பார்த்து வியக்கத்தக்கவையாக இருக்கின்றன.

இந்த தீவில் மட்டும் இருக்கும் உயிரினங்கள் ஏன் இப்படி வித்தியாசமாக இருக்கின்றன? இங்குள்ள மரங்கள் ஏன் வித்தியாசமாக வளர்கின்றன? இந்த இனங்கள் ஏன் உலகில் வேறு எங்கும் காணப்படுவதில்லை போன்ற பல சந்தேகங்கள், கேள்விகள் பல ஆராய்ச்சியாளர்களை ஆராய்ச்சி செய்ய தூண்டிவருகின்றன.

பல ஆய்வுகள் நடக்கின்றன. சுற்றுலா பயணிகள் பலர் இந்தத் தீவுக்கு வருகின்றனர். இத்தீவைப் பார்த்து வியக்கின்றனர்.

ஆனால், இந்த தீவுக்கு பின் இருக்கும் மர்மங்களுக்குத்தான் விடை தெரியாமலேயே உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

1880ம் ஆண்டில் தாவரவியல் அறிஞர் ஐசக் பெய்லி 500 வகை தாவரங்கள் சேகரித்தார். அதில் 200 க்கும் அதிகமான அறிவியல் புதிய இனங்கள் இருந்தன.

இன்றுவரை, ஏறத்தாழ 900 வாஸ்குலர் தாவரங்கள் மற்றும் 300 வகை வித்தியாசமான தாவர உருவாக்கம் வேறு எங்கும் காணப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

1513ல் தீவு அறிமுகம். முதலில் தீவுகளில் ஒரு சில எச்சங்கள் காணப்பட்டன. இந்த தீவில் 100 தனிச்சிறப்புமிக்கவற்றில் இப்போது 40 வகை மட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் தாவரங்கள் மற்றும் விலங்குகள் சந்தேகத்திற்கு இடமின்றி பல அழிவுகளைக் கண்டிருக்கின்றன. ஆனால், இப்போது ஒரு சமநிலை இயற்கைக்கு நிலவுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.