04/03/2018

தமிழின் முதல் இலுமினாட்டிகள் பற்றிய படம்...


தனி ஒருவன் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி நடித்து வெளிவந்த படம்.

இது நம் தமிழ் ரசிகர்களுக்கு புதுமையான களமாக இருந்ததால் வெற்றி பெற்றது.

ஆனால் இப்படம் சூசகமாக இலுமினாட்டிகளைப் பற்றி சொன்னது, இதனைக் குறிக்கும் இப்படத்தின் சில ஒற்றுமைகள்..

இப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரமான அரவிந்த்சாமி மிக அதீத அறிவுடனும், பண பலத்துடனும் அரசையே கட்டுப்படுத்துவார்.

தான் நேரடியாக எதையும் செய்யாமல் மாஃபியாக்கள் மூலம் அனைத்து குற்றங்களையும் செய்வார்.

மருத்துவத்துறையிலேயே இவர்கள் அதீத லாபம் ஈட்டுவதாக காட்டியிருப்பர்.

குழந்தைகளை சோதனைக்கு உட்படுத்துவர்.

ஒரு பிரச்சினையை திசைதிருப்ப வேறொரு பிரச்சினையை உருவாக்குவது போல காட்டியிருப்பர்.

ஒவ்வொரு செய்திக்கும் ஒரு தொடர்பு உள்ளதெனவும், ஒவ்வொரு செய்திகளுக்குப் பின்னரும் வேறொரு சதி ஒளிந்துள்ளது என்பன போன்றும் காட்டியிருப்பர்.

ஜெயம் ரவியின் கதாபாத்திரம் இலுமினாட்டிகளைப் பற்றி ஆய்வு செய்யும் conspiracy theorist கள் போல வடிவமைக்கப்பட்டிருக்கும்.

படத்தின் முடிவு கெட்டவன் சாவது போல் தானே உள்ளது என நீங்கள் கருதலாம். ஆனால் இங்கு உள்ள Subliminal message என்னவெனில் படம் பார்த்து முடித்தவுடன் உங்களுக்கு Hero வை விட Villan னைத்தான் அதிகம் பிடித்திருக்கும்.

இதற்கெல்லாம் உச்சம்தான் தீமைதான் வெல்லும் பாடல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.