இன்று பலரும் கேட்கும் கேள்வியான நாஸ்ட்ரடாமஸ், தமிழர் / ஈழம் பற்றி ஏதாவது குறிப்பிட்டுள்ளாரா? என்ற கேள்விக்கு பொருந்தக்கூடிய அவரின் கூற்றுக்களை ஆராய்வோம்..
நாஸ்ட்ரடாமஸ் எங்கும் தமிழ் இனம் பற்றி தனியாக குறிப்பிட்டு கூறவில்லை, ஆனால் மூன்றாம் உலகப்போரிற்கு ஒரு சிறிய நாடு வித்திடும் என்றும். வேறு ஒரு பகுதியில் அருகருகே இருக்கும் இரு சிறிய நாடுகளால் உலக யுத்தம் மூளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈழம் என்பது தனி நாடாக கருதப்படின், இன்றைய கால கட்டத்தில் இலங்கை உலக யுத்தத்தை மூட்டிவிட வல்ல நாடாகத் தான் திகழ்கிறது என்பது சிந்தித்தால் புரியும்.
இலங்கையில் சீனா மற்றும் இந்தியாவின் தலையீடுகள் இருக்கின்றன.
ஒரு வேளை இலங்கை முற்றாக சீனாவின் பக்கம் சாய்ந்தால் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா பொருளாதார ரீதியில் அழுத்தங்களை கொடுத்து இறுதியாக மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கொண்டது போன்ற ஒரு யுத்தத்தை ஏற்படுத்தும்.
ஆனால், அவ்வாறு ஒரு யுத்தம் ஏற்பட்டு இலங்கை அமெரிக்காவின் கையில் சிக்குவதை ஒரு போதும் சீனாவும், ரஷ்யாவும் உடன்படாது.
காரணம், இலங்கை அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டால், ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் ஒடுக்கப்படும்..
ஆகவே, நாஸ்ட்ரடாமஸின் கூற்று இலங்கையை குறிப்பதாக பல ஐரோப்பிய ஆய்வாளர்களும் கருதுகிறார்கள்.
அடுத்து, நாஸ்ட்ரடாமஸின் இன்னோர் குறிப்பில்..
உலகை ஆண்ட இனமொன்று மீண்டும் ஆள நினைக்கும்… அதனால், உலக யுத்தம் மூழும் இனம் மீண்டும் ஆளும், அதற்கு அவர்களின் முன்னோர்களின் ஆவிகள் மனதளவில் தூண்டுதலாக இருக்கும்… எனும் பொருள்பட குறிப்பிட்டுள்ளார்.
இந்த வசங்கள் பெரும்பாலும் பிரித்தானியா விற்கே பொருந்தும் என பல ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
எனினும், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் உணர்வு பூர்வமான பல செயல்கள் இடம் பெறுவதை காண முடிகிறது.
பல ஆய்வாளர்கள் இப்போது தமிழில் அழிந்து போன மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொண்டு வர ஆரம்பித்துள்ளார்கள்.
இதனால், நாஸ்ட்ரடாமஸ் குறிப்பிட்ட அந்த இனம், தமிழ் இனமாக இருக்கலாம் என்று ஜேர்மனிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழினம் ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆண்டதற்கான ஆதாரங்கள் வெளிவரும் நிலையில், பல நூறு ஆண்டுகளாக முடங்கிப்போயிருந்த தமிழ் இனம் மீண்டும் ஆளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அடுத்த பதிவில், உலக முடிவு எப்போது? எப்படி? என்பதை பார்க்கலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.