04/03/2018

மே17 மலையாளி திருட்டு காந்தியின் ஏமாற்று வேலைகள்...


இன்றுவரை விடுதலை புலிகள் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பாரேயானால், அவருக்கு வயது 63 (பிறந்த வருடம் 1954)...

மறுமலர்ச்சி திராவிடர் கழகம் வைகோவின் வயது 73 (பிறந்த வருடம் 1944)...

மே 17 திருமுருகன் காந்தி தொடக்க 40 வயதுகளில் இருக்கிறார்...

வைகோவை விட பல மடங்கு வலிமை வாய்ந்த, முப்படைகளை தலைவனாய் நின்று வழி நடத்திய வேலுப்பிள்ளை பிரபாகரன் எப்படி திருமுருகன் காந்திக்கு "தோழர்" ஆகிறார் என்று நாம் கவனிக்க வேண்டும்.

ஈழத்தில் இறுதி போர் நடந்த காலத்தில் சீமானை விடுதலை புலிகள் அழைக்கிறார்கள். தான் சென்று பிரபாகரனை பார்த்து வந்து இன்று வரை சீமான், பிரபாகரனை "தமிழ் தேசிய இனத்தலைவர்" என்று எங்கு போனாலும் சொல்லி வருகிறார்.

ஆனால் திருமுருகன் காந்தியை ஈழ இறுதி போரின் போது விடுதலை புலிகள் யாரும் அழைக்கவில்லை, இன்னும் சொல்ல போனால் திருமுருகன் காந்தி, பிரபாகரனோடு பேசியது கூட கிடையாது.

மேலும் பிரபாகரனோடு ஒப்பிடுகையில் திருமுருகன் காந்தி வயதில் மிகவும் இளையவர்.

ஆனால் திருமுருகன் காந்திக்கு பிரபாகரனை "தோழர்" என்று கூப்பிட தான் மனம் வருகிறது.

ஆனால் வைகோவை திருமுருகன் காந்தி "தலைவர்" என்று அழைக்கிறார்.

ஈழ விடுதலையை எதிர் பார்த்து காத்து இருக்கும் பெரும்பான்மையான
ஈழ தமிழர்களுக்கும், ஈழம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் பல தமிழகத்து தமிழர்களுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைவராய் தெரிகிறார்.

ஆனால் ஈழ விடுதலையை பேசும் திருமுருகன் காந்திக்கு மட்டும் பிரபாகரன் தோழராய் தெரிகிறார்.

திருமுருகன் காந்தி பிரபாகரனை தலைவராய் ஏற்கும் மனநிலையில் என்றுமே இருந்ததும் இல்லை / இருக்க போவதும் இல்லை.

இங்கு தான் தமிழ் தேசியத்தின் முகமூடியில், திராவிடம் விளையாடுகிறது.

திராவிடர்கள் என்றுமே பிரபாகரனை, தலைவர் என்ற அளவுக்கு ஏற்றதே இல்லை. ஈழ விடுதலை உணர்வை, தமிழர்கள் அல்லாத திராவிடர்கள் தான் வழி நடத்த வேண்டும் என்று இன்று வரை முனைப்போடு உள்ளார்கள்.

அதற்கு இன்றைய இளைய தலைமுறை ஆள் தான் திருமுருகன் காந்தி என்ற தமிழ் தேசிய முகமூடியை அணிந்த திராவிடவாதி , அதற்கு தேவையான கருத்தியல் உள்ளீட்டை கொடுத்து கொண்டிருக்கும் பழைய தலைமுறை ஆள் தான் வைகோ.

அதனால் தான் வைகோவை திருமுருகன் காந்தி தலைவர் என்று அழைக்க மனம் வருகிறது, பிரபாகரனை தோழர் என்ற அளவிலே வைத்து பார்க்க முடிகிறது.

வைகோ போன்ற திராவிடர்களும் மேலும் திருமுருகன் காந்தி போன்ற தமிழ் தேசிய முகமூடி அணிந்த திராவிடர்களும் ஈழ விடுதலையை பற்றி பேசுவார்களே தவிர அதற்கான தீர்வை எங்கும் முன் நிறுத்த மாட்டார்கள்.

தமிழர்கள் அல்லாத திராவிடர்களுக்கு நாங்களும் தமிழ் உணர்வோடு இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ளவே இவர்களுக்கு அவ்வப்போது ஈழ அரசியலையும் ஊறுகாய் போல தொட்டு கொள்கிறார்களே தவிர வேறு ஒன்றுமில்லை. அதில் சில ஈழ தமிழர்களும் திருமுருகன் காந்தியை நம்பி ஏமாந்து கொண்டும் உள்ளார்கள்.

விழிப்பு தேவை..

பதிவு - நியந்தகுமார் சுப்பிரமணியம் (Jafna)...

குறிப்பு : சீமானை விடுதலை புலிகள் அழைத்து பேச வில்லை... அவராக சென்று ஒரு சில நிமடங்கள் சந்தித்தார் அவ்வளவு தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.