06/10/2018

தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரம்...


தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Sponsored by Revcontent

The Largest Demand Going into the Future - Where's the Supply Coming From?
SXSTREET

இந்நிலையில் தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த நான்கைந்து நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் 7-ம் தேதி அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அரபிக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் கடல் காற்று பலமாக வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மீனவர்கள் குமரி, அரபிக்கடல் பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்கு 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம் உள்ளிட்ட 15 மண்டலங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் கொத்தவாசேரியில் 9.3 செ.மீ மழை, விழுப்புரம், குன்னூரில் 8 செ.மீ., கடலூர் வானமாதேவி, நீலகிரி பர்லியாற்றில் 7 செ.மீ மழை

தென்காசி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

குமரி மாவட்ட மீனவர்கள் 800 பேர் கரை திரும்பவில்லை. முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் 557 விசைப்படகுகள் கரைதிரும்பின.

80 படகுகளில் சென்ற 800 மீனவர்கள் கரை திரும்பவில்லை. ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் விமானப்படை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.