24/06/2018

மாறிவரும் இந்தியாவின் நிறம் இரத்தம்...

               
இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடான பூடான் அரசு இந்திய ரூபாயையே தனது நாட்டின் பணபரிவர்த்தனைக்கு பயன்படுத்தி வருகிறது.

இந்திய பணங்களை ரொக்கமாக வைத்திருக்காதீர்கள். அவற்றை வங்கிகளில் செலுத்தி கொஞ்சம் கொஞ்சமாக. எடுத்து செலவு செய்யுங்கள். மீறி வைத்திருந்து நஷ்டபட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்று தன்நாட்டுமக்களை எச்சரித்துள்ளது.

விரைவில் மீண்டும் மதிப்பிழப்பு நடவடிக்கை இருக்கலாம் என்பது அவர்கள் சொல்லும் காரணம். ஆனால் அமெரிக்கா  பொருளாதார போரை இந்தியா மீது தொடுத்துள்ளது மேலும் தவறான பொருளாதரக் கொள்கை மூலம் வங்கிககள் ஒவொன்றாக திவாலாகிக் கொண்டே வருகின்றன.

அரசாங்கம் வருவாயை பெருக்க தெரியாமல் பெட்ரோலிய வருமானம் மற்றும் GST மூலம் பொருளாதார நெருக்கடியை தற்காலிகமாக சமாளித்து வருகிறது! பொருளாதரம் சார்ந்த அரசின் திட்டங்கள் படுதோல்வி அடைந்து விட்டது! பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம் மற்றும் நிதித்துறை அமைச்சகத்துடன் ஏற்பட்ட ஆதிக்க மோதலில்  தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு குடும்பத்தை கவனிக்க செல்வதாக அமெரிக்கா சென்று விட்டார்.

வெறும் போலி புள்ளி விபரங்களை மட்டும் வைத்து பொருளாதார வளர்ச்சி காட்டிய அரசின் சாயங்கள் வெளுக்க தொடங்கியுள்ளன. எந்த தொழில் செய்தாலும் நஷ்டம் ஏற்படும் நிலையில் இந்தியா உள்ளது.

ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் காட்டபடும் சலுகையாலும் மற்றும்
முக்கியமான பதவிகளில் அறிவோடும் ஆளுமையோடும் செயல்பட வேண்டிய பதவிகளில்  வெறும் சாதிமதம் ஹிந்துத்துவா மட்டும்  பார்த்து நிரப்ப பட்ட திறமையற்ற  ஸ்டன்ட் பார்டிகளால் முக்கியமான பதவிகளின்  செயல் பாடுகள் முடங்கி விட்டன.

 மிகப்பெரிய பொருளாதார சரிவை நோக்கி இந்தியா வேகமாக பயணித்து வருகிறது என்பதே உண்மை.
       
அதற்காக அவசரகோலத்தில்               நாட்டின் பல லட்சம் கோடிகள் மதிப்புள்ள                                               கனிமவளத்தை திருடி விற்க முயற்சி எடுத்து வருகிறது கையாலாகாத மத்திய அரசு.

அதையும் அரசே நேரடியாக எடுத்து விற்பனை செய்தால் உடனடியாக பணம் கிடைக்காது முதலீடு செய்யவும் பணம் இல்லாத காரணத்தால் வெளிநாட்டு தனியார் கம்பெனிகளிடம் சரணடைந்து விட்டது இந்தியா.

கனிம வளம் எடுக்கும் உரிமையை தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம் உடனடியாக பணம் திரட்ட முடிவு செய்துள்ளது.

அந்த கனிமக் கொள்ளையை வெளிநாடுகளூக்கு கப்பல் மூலம் கடத்துவதற்கே பல இடங்களில் துறைமுகத்தை உருவாக்கும் சாகர்மாலா திட்டம்! அந்த துறைமுகத்திற்கு சரக்குகளை கடத்துவதற்கே சாலைகள் போடப்படும் பாரத்மாலா திட்டம்.

சாகர்மாலா திட்டத்திற்கு 7.5 லட்சம் கோடி உலக பணக்காரன் ராக்பெல்லர் முதலீடு செய்துள்ளான். அதன் துணை திட்டமான சாலைகள் அமைக்கும் பாரத்மாலா திட்டத்திற்கும்  கனிமவளக் கொள்ளை திட்டத்திற்கும் வெவ்வேறு பெயர்களில் உலக பணக்கார வர்கங்கள் முதலீடு செய்துள்ளன.

விரைவில் அனைத்து வங்கிகளும் உலகின் வங்கிகளின் தலைஎழுத்தை நிர்ணயிக்கும் ரோத் சைல்ட் என்ற பன்னாட்டு நரியால் வாங்கப்டும்.

ராக்ஃபெல்லர் மற்றும் ரோத் சைல்ட் ஆகியோரின் பிடியில் தான் அனைத்து காங்கிரஸ் பிஜேபி அரசுகளும்..

இது நாள் வரை மறைமுக ஆதிக்கம் செலுத்திய இவர்களில் ராக்ஃபெல்லரிடம் நேரடியாகவே சரணடைந்துள்ளது மோடி அரச..

கனிமவளத்தை ஏலம் எடுக்க போகும் தனியார் நிறுவனங்களும் இவர்களின் பினாமி நிறுவனங்களே..

ஆனால் இவர்கள் எதிர்பார்த்த படி விரைவாக செயல்படுத்த முடியவில்லை. பணம் கொடுத்த முதலாளிகள் கொடுக்கும் நெருக்கடி இவ்வளவு
ஆத்திர அவசரமாக அடிமை தமிழக அரசை வைத்து ஒரே நாளில் 10000 கோடியை தமிழக அரசின் கருவூலத்துக்கு சேர்த்து
சேலம் கனிமவளம் -சென்னை துறைமுகம் 8 வழிச்சாலையை விரைவு படுத்த முயற்சிக்கிறது மத்தியஅரசு.

அதை செயல்படுத்த தெரியாத கைநாட்டு மாநில அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது.இவ்வளவு தூரம் பொதுமக்களின் விழிப்புணர்வை, எதிர்ப்பை எதிர்பார்க்காத மாநில அரசு கையைபிசைந்து கொண்டு நிற்கிறது! இந்த கொடுத்த கூலிக்கு மாரடிக்க தாமதிக்கும்  அரசுகளை  வெளுக்க  ராக்பெல்லர் சாட்டை எடுத்து விட்டான்.

அதனால் இந்த கையாலாகாதவர்கள் தன்  ஆத்திரத்தை மக்கள் மீது காட்டுகிறார்கள்.

உலகின் மூத்த குடி தமிழ்குடிகள் ஒன்றுபட்டு இந்த அரசுக்கு கொடுக்கும் பதிலடி.

உலக பணக்கார வர்கத்தின் முகத்தில் விழும் செருப்படியாக இருக்க வேண்டும்.

ஒன்று படுவோம்.. வென்றெடுப்போம்.. மண்ணைக்காப்போம்.. இறுதி வெற்றி நமதே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.