15/02/2019

திராவிடம் என்பது தமிழர் இனப்பகையே? அதனை ஏன் அகற்ற வேண்டும்?


1.1965 ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் விளைந்த காங்கிரஸ் எதிர்ப்பினை வடுக திராவிடம் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு 1967 ல் காங்கிரஸ் அரசினை தமிழர்களின் ஏகோபித்த ஆதரவினால் வீழ்த்தியது.

ஆனால் அந்தக் காங்கிரஸ் அரசு தான் தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தினை அமுல் படுத்தி அதனை ஆட்சி மொழியாக்கக் கருதி தமிழ் ஆட்சி அதிகார மொழிக்கான பேரகராதியை உருவாக்க ரூபாய் 56கோடியை (66 கோடியா என்று நினைவில் இல்லை. இருக்கலாம் ) ஒதுக்கி விட்டு ஆட்சிக் கட்டிலை விட்டு இறங்கியது.

ஆட்சிக்கு வந்த வடுக தெலுங்கர் அண்ணாதுரை திராவிட அரசு அந்தச் செயல் திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டது.

அது மட்டும் இல்லாமல் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று வாய்மணக்க முழங்கி விட்டு, திராவிடர்களால் குல்லூகப் பட்டர் என்று அழைக்கப்பட்ட ராச கோபாலாச்சாரியாருடன் சேர்ந்து கொண்டு  HINDI NEVER - ENGLISH EVER  என்று மாநாடு நடத்தி முழங்கினார்.

ஆனால் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப் படுத்துவதற்கு பதிலாக தாய்மொழிக்கல்வியை நடைமுறைப் படுத்துவோம் என்று கூறி அதன்படியே செயல்பட்டார்.

அதாவது தாய்மொழிக் கல்வி என்றால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 85 விழுக்காடு தமிழர்கள் என்ற நிலையில் அன்று இருந்த தமிழ் அறிஞர்கள் அது தமிழ் வழிக் கல்வியாகவே இருக்கும் என்று நம்பி ஏமாந்தார்கள்.

ஆனால் வடுகத் திராவிடம் இந்த சூழ்ச்சியினால் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சி மொழி, கல்வி மொழி நீதிமன்ற மொழி, வணிக மொழியில் தமிழ் கோலோச்சுவதை தடை செய்து விட்டு, இன்னொருபுறம் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, அது ஒரு மூட நம்பிக்கையுள்ள மொழி என்ற பிரச்சாரத்தை ஊடகம், சினிமா அச்சு ஊடகங்கள் வழியாக கன்னட ராமசாமியின் பிரச்சாரத்தின் மூலம் தமிழ் மக்களையே தமிழுக்கு எதிராக மடை மாற்றினார்கள்.

அது மட்டும் அல்ல இன்று ஆரம்பக் கல்வியில் இருந்தும் தமிழ் விரட்டுப்பட்டு விட்டதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இவ்ர்கள் இவ்வாறு நடந்துக் கொள்ளக் காரணம் இவர்கள் தமிழர்கள் இல்லை என்பதாலும் இவர்களே காலம் காலமாக தமிழர்களை அடக்கி ஆளவேண்டும் என்று கருதுவதாலும் தான்..

தமிழர்களின் தாய் மொழியாம் தமிழை அழித்து ஒழிக்க முற்பட்டுள்ளார்கள்.

எனவே தான் திராவிடம் தமிழ்நாட்டில் இருந்து முற்றாக அழித்து ஒழிக்கப்பட வேண்டும்.

அதனை நாம் வாக்குச் சீட்டின் மூலம்  நிறைவேற்ற முடியும்...

ஆம்.. இனி தமிழர் நாட்டை தமிழரை மட்டுமே ஆள வைப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.