நம் உடல் முழுவதும் கலங்களால் ஆனது. ஒரு கிராம் சதையில், ஒரு துளி ரத்தத்தில் சில ஆயிரம் கலங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு கலத்திலும் உட்கரு ஒன்று உள்ளது. ஒவ்வொரு உட்கருவிலும் 46 நிறமூர்த்தங்கள் (Chromosomes) உள்ளன. ஒவ்வொரு நிறமூர்த்தங்களிற்குள்ளேயும் இருப்பதுதான் டி.என்.எ, அதன் சிறு பகுதிகள் தான் மரபணுக்கள்.
இதுதான் டி.என்.எ வின் இருப்பிடதகவல் (Location). உயிரகளின் உருவாக்கம் மற்றும் அவற்றின் அடிப்படை செயல்பாடுகள் அனைத்திற்கும் டி.என்.எ வே காரணம். அவற்றில் பத்து லட்சம் (million) கணக்கான வருட பரிணாம வளர்ச்சியால் தகவல்கள் பதிகின்றன.
கணினி நினைவகம் (Computer Memory) போலத்தான். இப்படி பதிந்துள்ள தகவல்கள் மூலம்தான் எல்லாம் நடக்கிறது. பரிணாம வளர்ச்சி மூலம் பல்வேறு உயிரனங்கள் உண்டானதே இந்த டி.என்.எ வில் நடந்த மாற்றங்களும் அவற்றை இயற்கை தேர்வு செய்ததும்தான்.
பறவை, பாம்பு, பொருட்களைப்புளிக்க வைக்கும் (அ) நோய் உண்டாக்கும் நுண் உயிரிகள் (bacteria) , திமிங்கலம், குரங்கு, மனிதன் என்று வெவ்வேறு உயிரனங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளும், ஒரே சிற்றினத்தின், உதாரணமாக மனித இனத்தின் தனித்தனி மனிதர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளும் (முகம், கைரேகை, விழித்திரை உட்பட) இந்த டி.என்.எ வின் அமைப்பில் உள்ள மாற்றங்களால்தான்.
அவ்வளவு முக்கியமான விசயம் அது. சரி டி.என்.எ என்பது எங்கு உள்ளது? ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? என்று தெரிந்தது. அடிப்படியில் அது என்ன? அது ஒரு மூலக்கூறு. கார்பன்,ஐதரசன் (Hydrogen), பிராணவாயு (oxygen), நைதரசன் (Nitrogen), எரியம் (phosphorus) ஆகிய தனிம அணுக்கள் சேர்ந்த ஒரு பெரிய மூலக்கூறு. மிக மிகப்பெரிய மூலக்கூறு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.