15/02/2019

உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் திருவள்ளுவர்...


சிங்கப்பூரில் உள்ள பிரபல MDIS கல்வி நிலைய வளாகத்தில் திருவள்ளுவர் சிலை.

சிங்கையில் உள்ள பிரபலமான மேலாண்மை பட்டப்படிப்பு வழங்கும் MDIS என்னும் (Management Development Institute of Singapore) கல்வி வளாகத்தின் நுழைவாயிலில் உலகின் தலைசிறந்த பத்து சிந்தனையாளர்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழர்களின் பெருமையான திருவள்ளுவருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைகள் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பலருக்கும் இது குறித்த செய்தி தெரியாது. அதனால் இதை பற்றியான செய்தியை நாம் பதிவு செய்கிறோம்.

பல்லாயிரம் பன்னாட்டு மாணவர்கள் பயிலும் இந்த கல்வி நிலையித்தில் இத்தைகைய சிந்தனையாளர்களின் சிலைகளை வைத்திருப்பது, மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்றுக் கொடுப்பதொடு, நன்மை தீமைகளை மாணவர்கள் பகுத்துணர்ந்து அறிய இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளது MDIS நிர்வாகம்.

இதில் உள்ள உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியில் இதோ…

லூயிஸ் பாஸ்டர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இப் கால்டன், பென் ஜான்சன், அரிஸ்டாட்டில், திருவள்ளுவர், பிளாடோ, கன்புயுசியஸ், சாக்ரடிஸ் மற்றும் மரியா மாண்டேசரி..

இந்த சிலைகளை இந்த கல்வி நிலையத்தில் நிறுவுவதற்கு காரணமாக இருந்தவர் MDIS நிறுவனத்தின் பொதுச் செயலாளர் முனைவர் தேவேந்திரன் ஆவார். தமிழரான இவரது தாய் தந்தையின் பூர்வீகம் இலங்கை ஆகும்.

இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பெறுவதற்கும் இந்த தலைசிறந்த மனிதர்களின் உருவச் சிலைகள் உதவும் என்பதற்காக தேவேந்திரன் இந்த சிலைகளை கல்வி நிலையத்தின் வாசலில் நிறுவி உள்ளார்.

பன்னாட்டு மாணவர்கள் இப்போது யார் திருவள்ளுவர் என்பது பற்றியும் உலகப் பொது முறையாம் திருக்குறள் பற்றியும் அறிந்து வருவது தமிழர்களுக்கு பெருமை தானே.

இது போல் உலகில் பல்வேறு நாடுகளிலும் திருக்குறளின் பெருமையை பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் அறியுமாறு தமிழர்கள் தங்களால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும்.

தமிழுக்கு பெருமை சேர்க்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் பாராட்டுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.