18/09/2020

4 அரசு பிஎட் கல்லூரிகளில், 2020-21 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக தடை...



தமிழகத்தில் 4 அரசு பிஎட் கல்லூரிகளில், 2020-21 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக தடை விதித்து தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (என்சிடிஇ) தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக அந்த குழுமம் வெளியிட்ட அறிக்கையில்,

சென்னை மெரினாவில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி போதிய ஆவணங்களை சர்ப்பிக்கவில்லை.

புதுக்கோட்டை அரசு பி.எட்., கல்லூரியில் 16க்கு பதில் 12 ஆசிரியர்கள் தான் உள்ளனர்.

குமாரபாளையம் அரசு கல்லூரியில் 16 ஆசிரியர்களுக்கு பதில் 9 பேர் தான் உள்ளனர்.

திருமயம் அரசு பி.எட்., கல்லூரி முதல்வர் ஆசிரியர்கள் என்சிடிஇ விதிகள் படி நியமனம் செய்யப்படவில்லை.

இதனால், இக்கல்லூரிகளில் தற்காலிகமாக, 2020-21 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. குறைபாடுகளை சரி செய்து 3 மாதத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அதுவரை மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.